பெங்களூரு:பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை கல்வி, வேலைவாய்ப்பில் வழங்குவதற்கான மேற்குவங்காள மாநில அரசின் தீர்மானத்தை வரவேற்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.
மேற்குவங்காள மாநிலத்தில் முஸ்லிம்கள் ஹிந்து ஒ.பி.சி பிரிவினரை விட மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையிலுள்ளது ஏற்கனவே தெளிவான ஒன்று. ஆதலால் அவர்களில் ஏதாவது ஒரு பிரிவினருக்கு மட்டுமாக இடஒதுக்கீட்டை குறைப்பது அநீதியானது என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கிடைத்த விபரங்களின் அடிப்படையில் மேற்குவங்காள மாநிலத்தில் அரசு வேலையில் தற்ப்போது முஸ்லிம்களின் பங்கு 4 சதவீதம் மட்டுமே. மக்கள் தொகை அடிப்படையில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமெனில் குறைந்தது 20 சதவீத இடஒதுக்கீடாவது வழங்கவேண்டும். ரங்கநாத் மிஷ்ரா கமிஷனின் சிபாரிசுகள் கூறும் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டுமென்பது தேசிய மக்கள் தொகையில் முஸ்லிம்களின் 13.4 சதவீதத்தை கணக்கில் கொண்டாகும். மேற்குவங்காளத்தை விட குறைந்த முஸ்லிம் மக்கள் தொகைக் கொண்ட கேரள மாநிலத்தில் 12 சதவீத இடஒதுக்கீடு தற்ப்போது உள்ளது. இடதுசாரிகள் ஆட்சிபுரியும் கேரள மாநிலத்தை மேற்குவங்காள இடதுசாரிகள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.
பகுதி அரசு நிறுவனங்கள், பொதுத்துறை, அரசு உதவி பெறும் நிறுவனங்கள் உள்ளிட்ட எல்லா துறைகளிலும், கல்வித்துறையிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும்.
ஆந்திர மாநில அரசு முஸ்லிம்களுக்கு வழங்கிய 4 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் ரத்துச்செய்த ஆந்திரமாநில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானதும் நீதிபீடத்தின் ஒரு பகுதியினரின் பிரிவினை மனப்பான்மையை வெளிச்சம் போட்டும் காட்டுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைச் செய்யும் ரங்கநாத் மிஷ்ரா கமிசனின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தக் கோரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக மேற்குவங்காள மாநில கமிட்டியின் தலைமையில் நேற்று ஆரம்பித்த வாகனப்பேரணி மாநிலத்தில் வருகிற 20 ஆம் தேதி முர்ஷிதாபாத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தோடு நிறைவுறும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலர் ஒ.எம்.எ ஸலாம் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மேற்குவங்காளத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்பு"
கருத்துரையிடுக