11 பிப்., 2010

மரண தண்டனை தீர்ப்பு: சமூக, பொருளாதார சூழல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்- சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி:குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் பொழுது அவர்களின் சமூக-பொருளாதார சூழல்களையும் சிறைவாசக் காலத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெளிவுப்படுத்தியுள்ளது.

ஆயுள் தண்டனை என்பது சாதாரண நீதிமன்ற விதி என்றும் ஆனால் ஆபூர்வத்தில் அபூர்வமான வழக்குகளில் மட்டுமே உச்சபட்சத் தண்டனை வழங்கவேண்டுமென்றும் நீதிபதிகளான பி.சதாசிவம், ஹெச்.எல்.தத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியது.

உத்தரபிரதேச மாநிலத்தில் ஐந்து விவசாயிகளை கடத்திச்சென்று கொன்ற இரண்டு பேருக்கு கீழ் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளிக்கும் பொழுதுதான் தேசத்தின் உச்ச நீதிபீடமான சுப்ரீம் கோர்ட் இதனை தெரிவித்தது.

கடந்த 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி இவ்வழக்கின் கூறப்பட்டுள்ள குற்றம் நடந்தேறியது. 5 விவசாயிகளை கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டிய முல்லா,குட்டு ஆகிய இருவர் பின்னர் அவர்களை கொன்றனர். இவர்களிருவருக்கும் கீழ் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை ஏற்றுக்கொண்டது அலகபாத் உயர்நீதிமன்றம்.அந்தத் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அப்பீலுக்கு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது.

ஆனால் 14 ஆண்டு காலம் சிறையிலிருந்த பிறகும் கூட அச்சிறைக் கைதிகளுக்கு நல்லொழுக்க சிந்தனை வராததால் அவர்களின் மரணம் வரை சிறையிலடைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மரண தண்டனை தீர்ப்பு: சமூக, பொருளாதார சூழல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்- சுப்ரீம் கோர்ட்"

கருத்துரையிடுக