வாஷிங்டன்:அமெரிக்காவிற்கு தேவை பேராசிரியரை அல்ல, மாறாக ஒரு ராணுவ கமாண்டர்தான் என முன்பு அமெரிக்க துணை அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்ட ஸாரா பாலின் தெரிவித்துள்ளார்.
நாஷ்வில்லியில் நடைபெற்ற டீ பார்டி என்ற அமைப்பின் கன்வென்சனில் உரை நிகழ்த்தினார். அவ்வுரையில் ஸாரா பாலின் அமெரிக்க அதிபர் ஒபாமாவை கடுமையாக விமர்சித்தார். தீவிரவாதத்திற்கெதிரான யுத்தத்தை ஒபாமா தவறாக பயன்படுத்திவருகிறார். நைஜீரியாவைச் சார்ந்த இளைஞர் ஒருவர் அமெரிக்க விமானத்தை தகர்க்க முயன்றதையும், அதற்கு அமெரிக்கா மேற்க்கொண்ட நடவடிக்கைகளையும் விமர்சித்த ஸாரா பாலின் அமெரிக்காவிற்கு தேவை பிரசங்க மேடையின் பேராசிரியரை அல்ல மாறாக தலைமை தாங்கத் தேவையான ஆட்சியாளரைத்தான் எனத்தெரிவித்தார்.
நவம்பரில் அமெரிக்க காங்கிரஸ் தேர்தலுக்கு முன்னோட்டமாக எதிர்க்கட்சிகள் டெமோக்ரேடிக் கட்சிக்கும், ஒபாமாவிற்குமெதிரே கடுமையான பிரச்சாரங்களை மேற்க்கொண்டு வருகின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "அமெரிக்காவிற்கு தேவை பேராசிரியரை அல்ல, ராணுவ கமாண்டரை: ஸாரா பாலின்"
கருத்துரையிடுக