26 பிப்., 2010

பிரதமர் மன்மோகன் சிங்கின் சவூதி அரேபிய பயணம்

பிரதமர் மன்மோகன் சிங்கின் சவூதி அரேபிய பயணத்தின் போது குற்றவாளிகளை திரும்ப ஒப்படைப்பது, பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் கூட்டாக செயல்பட குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் இம்மாதம் 27-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.​ ​மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவும் அவருடன் பயணம் மேற்கொள்கிறது.

இது குறித்து சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் தல்மீஸ் அகமது ரியாத்தில் திங்கள்கிழமை கூறியது:
"பிரதமரின் பயணத்தின் போது சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாவைச் சந்தித்துப் பேச இருக்கிறார்.​ அப்போது இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் குற்றவாளிகளை ஒப்படைப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

தற்போது உலக அளவில் அதிகரித்து வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் இரு நாடுகளையும் கவலையடையச் செய்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் கூட்டாக செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.​இது தவிர அறிவியல் தொழில் நுட்பத்தில் ஒத்துழைப்பு,​​ பொருளாதார கூட்டு நடவடிக்கைகள் உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.

சவூதி அரேபிய நாடாளுமன்றத்தில் மார்ச்1-ல் மன்மோகன் சிங் பேச இருக்கிறார்.​ இது வெளிநாட்டு தலைவருக்கு அரேபியாவில் அளிக்கப்படும் மிகப்பெரிய கெளரவம். ​இங்குள்ள இந்திய சமூகத்தினருடன் மன்மோகன் சிங் கலந்துரையாடுகிறார்" என்று அவர் தெரிவித்தார். பிரதமர் மன்மோகன் சிங்கின் முதல் சவூதி அரேபியப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பிரதமர் மன்மோகன் சிங்கின் சவூதி அரேபிய பயணம்"

கருத்துரையிடுக