துபாயில் கடந்த மாதம் ஹமாஸ் தலைவரை கொன்ற கொலையாளிகளில் மூன்று நபர்கள் போலியான பிரஞ்சு பாஸ்போர்ட்களை பயன்படுத்தியதாக பிரான்ஸ் உறுதி செய்திருக்கிறது.
இந்த கொலையில் சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள், பிரஞ்சு குடிமக்களின் அடையாளங்களை திருடி தங்களின் பாஸ்போர்ட்டுக்களில் பயன்படுத்தியிருப்பது தெளிவாக தெரிய வந்திருப்பதாக, பிரஞ்சு வெளியுறவு அமைச்சகம் கூறியிருக்கிறது.
இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று இதுவரை 26 நபர்களை துபாய் காவல்துறையினர் அடையாளம் கண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டுக்களை பயன்படுத்தி பயணம் செய்திருக்கிறார்கள்.
இந்த கொலைக்கு இஸ்ரேல் தான் பொறுப்பு என்று பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் இதுவரை மறுக்கவும் இல்லை. உறுதிப்படுத்தவும் இல்லை.

0 கருத்துகள்: on "ஹமாஸ் தலைவரை கொன்ற கொலையாளிக௦௦ள் மூவர் பயன்படுத்திய பிரெஞ்சு பாஸ்போர்ட் போலியானது: பிரான்ஸ்"
கருத்துரையிடுக