25 பிப்., 2010

குளிர்கால ஒலிம்பிக்: பனிச்சறுக்கு விளையாட்டில் ஹிஜாபுடன் கலந்துக் கொள்ளும் முஸ்லிம் பெண்மணி

ஹிஜாப் எங்கள் வாழ்வின் எவ்வித முன்னேற்றத்திற்கும் தடையாக இல்லை என்பதை தங்களது சாதனைகள் மூலம் நிரூபித்து வருகின்றார்கள் முஸ்லிம் பெண்கள்.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கி வருகிற பிப்ருவரி 28ஆம் தேதி வரை கனடா நாட்டின் வான்கோவரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் பனிச்சறுக்குத் தொடர்பான பல போட்டிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஜியண்ட் ஸ்லாலோம் மற்றும் ஆல்பைன் ஸ்லாலோம் போட்டிகளில் ஈரான் நாட்டு சார்பாக ஹிஜாப் அணிந்துக் கொண்டே பங்கேற்கிறார் மர்ஜான் கல்ஹோர் என்ற முஸ்லிம் பெண். இவர் ஈரானின் சார்பாக கலந்துக் கொள்ளும் முதல் பெண்மணியாவார்.

ஈரான் சார்பாக துவக்க விழாவில் கொடியை ஏந்தி வந்தவரும் இவரே. 21 வயது மருத்துவ பட்டப்படிப்பு மாணவியான கல்ஹோர் கூறுகையில், "இந்த ஒலிம்பிக் எனது கனவாகும். எனது இந்த பங்கேற்பு ஈரானிய பெண்களை ஊக்குவிக்கும். பெரும்பாலான பெண்கள் பனிச்சறுக்கு போட்டிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நான் ஒரு முன்மாதிரியாக திகழ்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் எனது தலைமுடியை மறைப்பதில் மிகவும் கவனமாக உள்ளேன். எனது தலைமுடி குட்டையானது. ஆதலால் ஒரு தொப்பியை அணிந்துள்ளேன். அதன்மேல் ஹெல்மட் அணிந்துள்ளேன்." என்கிறார் கல்ஹோர்.

விளையாட்டுப் போட்டிகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்துக் கொண்டு கலந்துக் கொள்வதற்கு மேற்கத்தியவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:islamonline.net

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குளிர்கால ஒலிம்பிக்: பனிச்சறுக்கு விளையாட்டில் ஹிஜாபுடன் கலந்துக் கொள்ளும் முஸ்லிம் பெண்மணி"

கருத்துரையிடுக