துபாய்:அரபு நாடுகளின் ஆதரவைத் தேடி 3 நாள் மத்திய ஆசிய நாடுகளில் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அரசுச்செயலர் ஹிலாரி கிளிண்டன் நேற்று கத்தர் தலைநகரான தோஹாவிற்கு வருகை புரிந்தார்.
அணுசக்தி திட்டத்துடன் முன்னேறிச் செல்லும் ஈரானுக்கெதிராக தடையை வலுப்படுத்தத்தான் இந்த சுற்றுப்பயணம் என கூறப்படுகிறது. அத்துடன் ஒரு வருடமாக முடங்கிக்கிடக்கும் ஃபலஸ்தீன் இஸ்ரேலுக்கிடையேயான சமாதான பேச்சுவார்த்தைக்கான முயற்சியை துவங்குவதுமாகும். அமெரிக்கன் இஸ்லாமிக் வேல்ட் ஃபாரம் மாநாட்டில் உரைநிகழ்த்துவதற்கு முன்பு ஹிலாரி முக்கியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஆதரவுத்தேடி ஹிலாரி கிளிண்டன் மத்திய ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம்"
கருத்துரையிடுக