15 பிப்., 2010

ஹைத்தியில் இஸ்ரேல் உடல் உறுப்புகளை திருடியதுப் பற்றி விசாரிக்க வேண்டும் என்றுக் கோரியவரின் பதவி பறிப்பு

லண்டன்:ஹைத்தியில் இஸ்ரேல் ராணுவம் உடல் உறுப்புகளை திருடியது பற்றிய குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று கோரிய பிரிட்டீஷ் பிரபுக்கள் சபையில் லிபரல் டெமோக்ரேடிக் பார்டியின் செய்தித் தொடர்பாளர் பாரணஸ் ஜெனி அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஹைத்தியில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகளை அங்கு சென்ற இஸ்ரேலிய ராணுவம் திருடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று ஜூவிஸ் க்ரோணிகிள் என்ற பத்திரிகைக்கு பாரணஸ் அளித்த பேட்டியில் கோரியிருந்தார்.

யூ ட்யூபில் பரவலாக பரப்பப்படும் இந்தக் குற்றச்சாட்டைக் குறித்து இஸ்ரேல் ராணுவமும், இஸ்ரேல் மருத்துவக் குழுவும் சுதந்திரமான விசாரணைக்கு தயாராகவேண்டும் என்றும், ஹைத்தியில் தங்களுடைய குழுவினர் மீதான சந்தேகத்தை போக்கவேண்டும் என்றும் பாரணஸ் கோரியிருந்தார்.

இக்குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளவியலாததும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியதும் என சுட்டிக்காட்டி பாரணஸை லிபரல் டெமோக்ரேடிக் பார்டி தலைவர் நிக் க்ளக் கட்சியிலிருந்து வெளியேற்றியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹைத்தியில் இஸ்ரேல் உடல் உறுப்புகளை திருடியதுப் பற்றி விசாரிக்க வேண்டும் என்றுக் கோரியவரின் பதவி பறிப்பு"

கருத்துரையிடுக