15 பிப்., 2010

நெஞ்சுக்குள் ஒரு நெருடல்!

நெஞ்சுக்குள் ஒரு நெருடல்!
எப்போதுமே இல்லாத அழுத்தம்
இப்போது என் உள்ளத்தில்!

ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும்;
கொட்டிய மேளத்துடன்
தட்டிய கைகளுடன் சற்றே
தொலைவில் ஒரு கூட்டம்!

சிலைகளை உடைக்க
பல தலைகள் அங்கே!
வாங்கி வந்த மாலையுடன்
வரவேற்க வாசலிலே நாங்கள்!

எப்படி வேண்டுமானாலும் சூட்டிக்கொள்ளுங்கள்
இதற்க்கு பெயரை - பயம் என்றோ ; பாதுகாப்பு என்றோ!!

இழித்த முகமாக இருந்தாலும்
இதயத்தில் ஒரு தவிப்பு,
இறுதிக்கட்ட ஈமானில் ;
வெறுத்தும் ஒதுங்க முடியவில்லையா?

ஒத்துழைக்கா விட்டால்
ஒடுக்குகிறார்கள் !
ஓராமாய் நின்றாலும்
உறசுகிறார்கள்!!

வலியுடன் வேறு வழி இல்லாமல்
மாலையுடன் !!

உறுத்திய உள்ளத்திற்கு
நானே கூறிய ஆறுதல்;
உடைப்பது நீயாய் இருந்தால் என்ன;
அவனாய் இருந்தால் என்ன;
"கரு" உடைப்பது தானே?

இப்படியாய் ஆடும் என் மனதிற்கு
மின்னலாய் ஒரு வெட்டு

இப்படியே என் பிள்ளைகளும் தூக்குமோ மாலையை?
வாழப்போகும் தலைமுறைக்கு இதுதான்
என் வழி முறையோ?

காலம் போனபின் என் வீட்டு
கதவை தட்டுவார்கள் கோவிலுக்கு நிதி என்று!
பின்னொரு நாளில் கடாய் வெட்ட காசு!
யுத்தத்திலும் அதனால் ரத்தத்திலும்
உறைந்து போன உத்தம நபி தோழர்கள் இதற்க்கா?

வறண்டு போன வயிறுடன்
முரண்டு பிடித்தது இதற்க்கா?

உயிரையே இழந்தாலும்
ஒரு முறை கூட சாய்ந்ததே இல்லையே
அந்த சஹாபாக்கள்!

மார்க்கம் சொல்லியதை மறந்து இப்படி
மாலையோடா நிற்பது?
தூக்கிய மாலையை தூர எறிந்துவிட்டு
மெதுவாய் நகர்ந்தேன் - அழுத்தமான முடிவுடன்!

மீண்டும் ஒரு முறை வேண்டினேன் என் இறைவனிடம்
"அவுது பில்லாஹி மினஸ் சைத்தான் நிர்ரஜிம்"


கவிதை:யாசர் அராபத்
source:சகோதரர் அனுப்பிய மின்னஞ்சல்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நெஞ்சுக்குள் ஒரு நெருடல்!"

கருத்துரையிடுக