1 பிப்., 2010

எனக்கெதிரான வழக்குகள் நகைப்பிற்கிடமானது- டாக்டர் ஆஃபியா சித்தீகி

வாஷிங்டன்:தனக்கெதிரான வழக்குகள் நகைப்பிற்கிடமானது என பாகிஸ்தானைச் சார்ந்த டாக்டர் ஆஃபியா சித்தீகி நியூயார்க் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எஃ.பி.ஐ ஏஜெண்டையும், அமெரிக்கா ராணுவ வீரரையும் கொலை செய்ய முயன்றார் என்ற குற்றஞ் சாட்டப்பட்டுத்தான் ஆஃபியா அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணையை சந்தித்து வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஆஃபியாவிற்கெதிராக சாட்சி கூற போஸ்டனிலுள்ள Gun Inspectorஐ அரசு தரப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. துப்பாக்கியை உபயோகிப்பது தொடர்பாக ஆஃபியா 1990 களின் ஆரம்பத்தில் 12 மணிநேர அடிப்படை பயிற்சியை எடுத்துள்ளார் என மாசாசூட்சில் ப்ரயின் ட்ரீ ரைஃபிள் அண்ட் பிஸ்டல் கிளப்பின் காரி உட்வர்த் கூறினார். தனக்கு துப்பாக்கியை பயன்படுத்த தெரியாது என்றும், துப்பாக்கி சுடும் பயிற்சியை தான் மேற்க்கொள்ளவில்லை என்ற ஆஃபியாவின் கூற்றை ஆய்வுச் செய்யத்தான் Gun Inspector ஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மாசாசூட்ஸில் தான் கல்வி பயிலும்பொழுது ப்ரயின் ட்ரீயில் தான் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் சேரவில்லை என ஆஃபியா நீதிமன்றத்தில் தெரிவித்தார். தான் உபயோகித்ததாக கூறப்படும் M-4 துப்பாக்கியை சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த பொழுதுதான் தான் பார்த்ததாகவும் ஆஃபியா தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நபர் எடுக்கும்விதமாக ஒரு அமெரிக்க ராணுவ வீரன் துப்பாக்கியை வைத்திருப்பான் என்று கூறுவது முட்டாள்தனமும், நகைப்பிற்கிடமானதுமாகும். நான் அதைச்செய்யவுமில்லை என்றார் ஆஃபியா.

கடந்த 2008 ஆம் ஆண்டு விசாரணை வேளையில் M-4 அமெரிக்க வாரண்ட் அதிகாரியின் துப்பாக்கியை எடுத்து எஃப்.பி.ஐ ஏஜண்டையும், அமெரிக்க ராணுவ வீரனையும் சுட்டுக்கொல்ல முயன்றார் என்பதுதான் ஆஃபியாவின் மீது சாட்டப்பட்டுள்ள குற்றமாகும். ஆனால் இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறுகிறார்கள். ஆனால் ராணுவ வீரன் துப்பாக்கியால் சுட்டதில் ஆஃபியாவிற்கு குண்டடிக்காயம் பட்டதாகவும் கூறப்படுகிறது. தனது கைப்பையில் கெமிக்கல் பொருட்களையும், நியூயார்க் நகரின் வரைப்படத்தையும், குண்டு தயாரிப்பதற்கான விபரங்கள் அடங்கிய புத்தகமும் வைத்திருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தார் ஆஃபியா. தனக்கு குண்டு தயாரிக்க தெரியாது என்றும், வரைப்படங்களை தான் வரைந்ததுமில்லை, ஏனெனில் எனக்கு படம் வரையத் தெரியாது எனவும் ஆஃபியா நீதிமன்றத்தில் கூறினார்.

சில வருடங்கள் தான் ஆப்கானிஸ்தான் சிறையிலிருந்ததையும் ஆஃபியா உறுதிச்செய்தார். கடந்த 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கராச்சியிலிருந்து ஆஃபியாவும் அவருடைய குழந்தைகளும் திடீரென காணாமல் போயினர். பின்னர்தான் அவர் அமெரிக்க ராணுவத்தால் கடத்தப்பட்டு ஆப்கானிஸ்தான் பக்ராம் சிறையில் அடைக்கப்பட்டார் எனது தெரிய வந்தது.

ஆனால் 2008 ஆம் ஆண்டில் ஜூலை 17 ஆம் தேதி ஆப்கான் கஸ்னி மாகாணாத்தில் வைத்து ஆஃபியாவைக் கைது செய்ததாக அமெரிக்கா தெரிவித்தது. அப்பொழுது விசாரணை நடத்தப்பட்டபொழுதுதான் ஆஃபியா அமெரிக்க ராணுவ வீரனை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்றதாக குற்றஞ் சாட்டப்பட்டு அமெரிக்க சிறைக்கு மாற்றப்பட்டார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எனக்கெதிரான வழக்குகள் நகைப்பிற்கிடமானது- டாக்டர் ஆஃபியா சித்தீகி"

கருத்துரையிடுக