பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மதுரையில் நடத்தும் சமூக எழுச்சி மாநாடு மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் இன்று (20.02.2010) துவங்கியது. வண்டியூர் ரிங் ரோட்டில் அமைந்திருக்கும் ஷஹீத் திப்பு சுல்தான் மாநாட்டு திடலில் காலை 9.00 மணிக்கு மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கொடியேற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார்.
அனைத்து சமூகங்களின் வளர்ச்சியில்தான் நாட்டின் உண்மையான வளர்ச்சி உள்ளது எனும் மாநாட்டுச் செய்தியை அறிவித்து, ‘’வாருங்கள் எழுச்சியின் பங்காளர்களாக’’ என மக்களை அறைகூவி அழைப்பது போல் பட்டொளி வீசிப் பறந்தது நட்சத்திரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக்கொடி.


ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் அப்துல் காதி முனீரி அவர்கள் பிரார்த்தனை நிகழ்த்தினார். மாநில அளவிலான தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
2 கருத்துகள்: on "சமூக எழுச்சி மாநாடு கொடியேற்றத்துடன் துவங்கியது"
adanki kitantha chamuthaayam eluchchiyutan
we r pfi
கருத்துரையிடுக