புதுடெல்லி:பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் கைதுச் செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்ஸல் குருவின் கருணை மனுத்தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்த விபரங்களை வெளிப்படுத்த மத்திய அரசு மறுத்துள்ளது.
அப்ஸல் குருவின் கருணை மனுவின் தற்போதைய நிலைக்குறித்தும், அதனை நிர்வகிக்கும் அதிகாரிகள் குறித்தும் கேள்வி எழுப்பி மும்பையில் தகவல் அறியும் சட்ட பணியாளர் வல்ஸராஜன் அளித்த மனுவிற்கு மத்திய அரசு நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான விபரங்கள் இதில் அடங்கியுள்ளதால் தகவல்களை அளிக்க இயலாது என பதில் கூறியுள்ளது.
2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்றத் தாக்குதலில் குற்றஞ் சாட்டப்பட்ட அப்ஸல் குருவிற்கு உயர்நீதிமன்றம் அளித்த தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் ஒத்துக்கொண்டது.
2006 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி அப்ஸல் குருவிற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற தேதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அப்ஸல் குருவின் மனைவி ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவினால் தூக்குத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "அப்சல் குரு கருணை மனு விபரங்களை வெளிப்படுத்த இயலாது: மத்திய உள்துறை அமைச்சகம்"
கருத்துரையிடுக