டெஹ்ரான்:ஈரான் கைது செய்துள்ள ஜுன்துல்லா தலைவர் அப்துல் மாலிக் ரிகி ஆப்கானில் அமெரிக்க முகாமில் தங்கியிருந்தார் என்று புலனாய்வுக்குழு தெரிவித்துள்ளது.
ரிகி தப்பிப்பதற்கு ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்டை தயார்படுத்திக் கொடுத்தது அமெரிக்க அதிகாரிகள் என்றும் இவருடைய அமெரிக்க தொடர்பிற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் பாதுகாப்பு உயர் அதிகாரியை மேற்க்கோள்காட்டி பிரஸ் டிவி செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் புரட்சிப்படையைச் சார்ந்த தலைவர்கள் உட்பட 40 பேரை கொலைச்செய்த வழக்குகளில் முக்கிய சூத்திரதாரியான துபாயிலிருந்து கிர்கிஸ்தானுக்கு விமானத்தில் செல்லும்போது புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர்.
ரிகியை கைது செய்த உடனேயே ஈரானின் தீவான பந்தர் அப்பாஸில் விமானம் தரையிறக்கப்பட்டது. ரிகிக்கு நேட்டோ படையினருடனும், ஐரோப்பிய யூனியனில் சில முக்கிய நபர்களுடனும் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவும், பிரிட்டனுடனான ரிகிக்கு உள்ள தொடர்பைக் குறித்த விபரங்களை விரைவில் வெளிப்படுத்தப்படும் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரமீன் மெஹ்மன் பராஸத் கூறியுள்ளார்.
ரிகியை கைது செய்ததற்கு 200 ஈரான் எம்.பிக்கள் ஈரான் அரசை அறிக்கையின் மூலமாக பாராட்டினை தெரிவித்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ரிகி தங்கியிருந்தது ஆப்கானில் அமெரிக்க முகாமில்: புலனாய்வுக் குழு"
கருத்துரையிடுக