புதுடெல்லி:காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் சில தினங்களுக்கு முன்பு உ.பி.மாநிலம் ஆஸம்கருக்கு பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்றிருந்தார்.
அது சம்பந்தமான அறிக்கையை அவர் காங்கிரஸ் அகில இந்தியத்தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அளித்தார்.
ஆஸம்கருக்கு திக் விஜய் சிங் செல்லும் முன்பு பாட்லா ஹவுஸ் என்கவுண்டரைப் பற்றி தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார். திக் விஜய் சிங்கின் விமர்சனம் விவாதத்தை கிளப்பியிருந்தது.
அறிக்கையை சோனியா காந்தியிடம் அளித்தது தொடர்பாக திக் விஜய் சிங் கூறியதாவது, "அறிக்கையை காங்கிரஸ் தலைவரிம் அளித்துள்ளேன். இதனை பரிசோதிப்பதாக அவர் எனக்கு உறுதியளித்துள்ளார். என்கவுண்டர் தொடர்பாக விசாரணை நடத்த தான் கோரிக்கை வைக்கவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருடன் கலந்தாலோசித்த பின்பே ஆஸம்கருக்கு சென்றேன். அல்லாமல் எனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் அல்ல". இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று முன்தினம் திக்விஜய்சிங் கூறுகையில் தீவிரவாத குற்றஞ்சாட்டி கைதுச் செய்யப்பட்டவர்களின் விசாரணையை சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தி விரைவில் முடிக்கவேண்டும் என்றார். திக் விஜய் சிங் உ.பி. மாநிலத்திற்கு பொறுப்பு வகிக்கும் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் ஆவார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பாட்லா ஹவுஸ்: திக் விஜய் சிங் சோனியாவுடன் சந்திப்பு"
கருத்துரையிடுக