லண்டன்:குவாண்டனாமோ என்ற சிறைக் கொட்டடிக்கு எதிரான கொந்தளிப்பை ஜிஹாதிகளுடனான கூட்டணி என்று கட்டுரை எழுதிய கீதா செகலை சர்வதேச மனித உரிமை இயக்கமான ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் இடை நீக்கம் செய்துள்ளது.
இஸ்லாமிய இயக்கங்களுடனான் உறவு ஆம்னஸ்டியின் நற்பெயருக்கு களங்கமேற்படுத்துகிறது எனக்குற்றஞ்சாட்டி கீதா செகல் தி சண்டே டைம்ஸில் கட்டுரை எழுதிய இந்தியா வம்சா வழியைச் சார்ந்த பிரபல நாவலாசிரியர் நயன்தாரா செகலின் மகளான கீதா செகலை உடனடியாக இடை நீக்கம் செய்தது.
குவாண்டனாமோவிலிருந்து விடுதலையடைந்த முஅஸ்ஸம் பேக் தலைமையிலான கேஜ் பிரிசனர்ஸ் என்ற அமைப்பிற்கு ஒத்துழைத்த ஆம்னஸ்டியின் பிரிட்டன் இயக்குநர் கெய்ட் ஆலனின் நடவடிக்கைதான் கீதாவுக்கு பிரச்சனையாம்.
குவாண்டானாமோ சிறைக்கொட்டடியை இழுத்து பூட்ட வேண்டுமென்றும், அதிலிலுள்ள கைதிகளுக்கு புணர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென்றும் கோரி பிரிட்டன் பிரதம் கார்டன் பிரவுனை சந்தித்த குழுவில் முஅஸ்ஸம் பேக்கும் உட்பட்டிருந்தார்.
தாலிபான்களை வெளிப்படையாக ஆதரிப்பவர் முஅஸ்ஸம். இதுபற்றி அவர் கூறுகையில்,"அல்காயிதா உள்ளிட்ட எந்த அமைப்புடனும் எனக்கு தொடர்பு இல்லை. தாலிபான்களை ஆதரிப்பது தவறான நடைமுறையல்ல." என்றார்.
அதே வேளையில் கீதா செகலின் குற்றச்சாட்டை ஆம்னஸ்டி மறுத்துள்ளது. அமைப்பின் நிலைப்பாடு தெளிவானது என்றும், மனித உரிமை மீறல்களுக்கான அமைப்பின் செயல்பாடுகளே இதற்கு ஆதாரம் என்றும் ஆம்னஸ்டியின் கொள்கை உருவாக்க பிரிவு மூத்த இயக்குநர் விட்னி பிரவுன் கூறுகிறார். கீதா செகலின் குற்றச்சாட்டைக் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஆம்னஸ்டி இண்டர்நேசனல் ஜிஹாதிகளுடன் கூட்டணி வைக்கிறது என்ற குற்றஞ்சாட்டிய கீதா செகல் சஸ்பெண்ட்"
கருத்துரையிடுக