லண்டன்/கொழும்பு:இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதியும், கடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளருமான சரத் பொன்சேகாவை கைதுச்செய்த ராணுவத்தின் நடவடிக்கையை சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் கண்டித்துள்ளது.
அரசியல் எதிரிகளுக்கெதிராக இலங்கை அரசுத் தொடர்ந்து வரும் வஞ்சம் தீர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதிதான் இது என்று ஆம்னஸ்டியின் ஆசியா-பசிபிக் இயக்குநர் சாம் சாரிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே பொன்சேகாவை அரசு கடத்திச்சென்று மறைவான இடத்தில் வைத்துள்ளதாகவும் அவருடன் தொடர்புக்கொள்ள தன்னை அனுமதிக்கவில்லை என்றும் அவருடைய மனைவி அநோமா குற்றஞ்சாட்டியுள்ளார். தனது கணவர் சிவிலியன் என்றும்(சாதாரண குடிமகன்) அவரை காவல்துறைக்கு பதிலாக ராணுவம் கைதுச்செய்தது சட்டவிரோதமென்றும் அவர் கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பொன்சேகா கைது:ஆம்னஸ்டி கண்டனம்"
கருத்துரையிடுக