தோஹா:இந்திய முஸ்லிம்கள் தம்மை வலிமைப்படுத்தும் முயற்சிகளுக்கு சுயமாக களமிறங்கவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத்தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கூறியுள்ளார்.
கத்தார் நாட்டில் செயல்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர் நல அமைப்பான இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து உரைநிகழ்த்தினார் அவர். முஸ்லிம்களுக்கு நீதி வழங்குவதில் கடந்த 60 ஆண்டுகளாக பல அரசுகளும், அரசியல் கட்சிகளும் தோல்வியை தழுவியுள்ளன.
இந்திய முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மேற்குவங்காளத்தில் அமைந்துள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தின் தலைநகரான பஹ்ராம்பூர் கால்நடை தொழுவத்திற்கு சமமான நிலையில் உள்ளது. குற்றம் சுமத்த பாரதீய ஜனதா கட்சி ஆட்சி புரியாத மேற்கு வங்காளத்தில் இந்த நிலை என்றால் மற்ற பகுதிகளில் நிலைமை எவ்வாறிருக்கும் என்பதை ஊகித்தால் புரிந்துக்கொள்ள இயலும்.
ஜனநாயகத்தில் தனது சக்தியை நிரூபிப்பவர்களுக்குத் தான் இடமுள்ளது. அழும் குழந்தைக்குத் தான் பால் என்ற நிலையில் அந்த குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொல்லவும் தற்ப்போதைய கட்சிகள் தயாராகும். அதனால்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 15 சதவீதம் முஸ்லிம்களின் எண்ணிக்கை இருந்த பொழுதிலும் அவர்களின் பிற்பட்ட நிலையை போக்குவதற்கான பரிந்துரைகள் அடங்கிய ரங்கநாத் மிஷ்ரா கமிஷனை நடைமுறைப் படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் ஒரு விவாதம் கூட நடைபெறாதது.
ஜனநாயகத்தில் இடம் என்பது அது ஒரு தர்மம் அல்ல. மாறாக உரிமையாகும். அதனை பயன்படுத்த முஸ்லிம்களுக்கும், பிற்பட்ட மக்களுக்கும் இயலவேண்டும். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மதசார்பற்ற கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்தபொழுதிலும் முஸ்லிம் எம்.பிக்களின் எண்ணிக்கை கடந்த பாராளுமன்ற எம்.பிக்களின் எண்ணிக்கையை விட குறைவாகும்.
பிற கட்சிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முஸ்லிம் எம்.பிக்களுக்கு முஸ்லிம் சமுதாயத்தை விட கட்சிதான் அவர்களுக்கு முக்கியம். இவ்வாறு அவர் உரைநிகழ்த்தினார்.
செய்தி:தேஜஸ்
0 கருத்துகள்: on "முஸ்லிம்கள் தம்மை வலிமைப்படுத்தும் முயற்சிகளுக்கு சுயமாக களமிறங்க வேண்டும்: இ.எம்.அப்துற்றஹ்மான்"
கருத்துரையிடுக