நமது மத்திய குடும்பநல-ஆரோக்கியத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் 2 ஆயிரம் கோடி ரூபாயில் நாப்கின் புரட்சி வரப்போவதாக கூறியிருந்தார்.
மாத சுழற்சியின்போது பெண்களுக்கு ஏற்படும் இயற்கை உபாதையினால் வெளிவரும் அசுத்த இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுவதுதான் சானிட்டரி நாப்கின். இந்திய பெண்கள் இதற்காக பெரும்பாலும் உபயோகிப்பது பழைய துணிகளையும், பருத்தி துணிகளுமாகும். இதனால் நோய்கள் பரவுமென்றும் ஆதலால் நோய்பரவாமல் தடுக்க பெண்கள் நாப்கினை உபயோகிக்க ஊக்குவிக்க வேண்டும் என்று யூனிசெஃபால் வெளியிடப்பட்ட அறிக்கை தான் மத்திய அரசை நாப்கின் புரட்சிக்கு தூண்டியுள்ளதாம்.
ஆனால் நவீன நாப்கினில் உள்ள பேடுகளிலிருக்கும் செல்லுலோசினை விட சிறந்தது துணிகள்தான் என்று ஆரோக்கிய நல மருத்துவர்கள் கூறுகின்றனர். பயன்படுத்தப்பட்ட பேடுகள் எளிதில் அழியாததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். ஒரு வருடத்திற்கு நூறு ரூபாய் வீதம் 20 கோடி பெண்களுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கு இது இலவசமாகவும், நடுத்தர வர்க்கத்தினருக்கு சலுகை விலையிலும் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். தமிழ் நாட்டில் பெண்கள் பள்ளிக்கூடங்களில் இத்திட்டம் செயல்படத் துவங்கியுள்ளது. தனியார்-கார்ப்பரேட் துறைகளோடு இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தப் போகிறதாம் மத்திய அரசு. நகரங்களில் இதற்கான சந்தையை கைப்பற்றிய பிறகு கிராமங்களை நோக்கி தமது சந்தையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளன. சந்தையை பிடித்துவிட்டால் விலையை உயர்த்துவதுதான் இவர்களின் திட்டமாக இருக்கும். இனி எதிலெல்லாம் புரட்சியை ஏற்படுத்தப் போகிறதோ மத்திய அரசு? ஆனால் இந்தப்புரட்சியில் ஆதாயம் அடைவது என்னவோ கார்ப்பரேட் கம்பெனிகள் தான்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "வருகிறது நாப்கின் புரட்சி!!"
கருத்துரையிடுக