கொல்கத்தா:கொல்லப்பட்ட ரிஸ்வானுர் ரஹ்மானின் குடும்பத்தினர் மற்றும் சமுதாயத்தின் உணர்வுகளை மதித்து லக்ஸ் கோஸி நிறுவனத்துடனான விளம்பர ஒப்பந்தத்திலிருந்து விலகினார் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளரான ஷாரூக் உள்ளாடை தயாரிப்பு நிறுவனமான லக்ஸ் கோஸியுடன் அடுத்த மாதம் துவங்கவிருக்கும் ஐ.பி.எல்-3 கிரிக்கெட் போட்டிகளுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்காக ஸ்பான்சர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். இதன் அடிப்படையில் கிரிக்கெட் வீரர்களின் ஆடைகள் மற்றும் மைதானத்தில் லக்ஸ் கோஸியின் விளம்பரம் இடம்பெறும் என்பதுதான் ஒப்பந்தம்.
லக்ஸ் கோஸியின் உரிமையாளரான அசோக் டோடியின் மகளான பிரியங்கா டோடியை கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் டிசைனரான ரிஸ்வானுர் ரஹ்மான் காதலித்து திருமணம் முடித்திருந்தார். இத்திருமண உறவை முறிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் டோடி குடும்பம் நடத்தியபொழுதும் ஒன்றுமே வெற்றிப் பெறவில்லை.
இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிஸ்வானின் இறந்த உடல் கொல்கத்தா ரெயில்வே ட்ராக்கில் சந்தேகத்திற்கிடமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இக்கொலைவழக்கில் டோடி குடும்பமும் பிரதியாக சேர்க்கப்பட்டிருந்தது. ஒரு அப்பாவியைக் கொன்ற கொலைக் குற்றவாளியான அசோக் டோடியின் லக்ஸ் கோஸியுடனான ஒப்பந்தத்திலிருந்து விலக முஸ்லிம் சமுதாய அமைப்புகளும், சில சமூக அமைப்புகளும் ஷாரூக் கானிற்கு கோரிக்கை விடுத்தன. இல்லாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தன.
இதனைத் தொடர்ந்து லக்ஸ் கோஸியுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக நைட்ரைடர்ஸ் அணியின் கைம் ப்ளான் டைரக்டர் ஜீத் பானர்ஜி பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து லக்ஸ் கோஸியுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதன் மூலம் நைட்ரைடர்ஸ் மோதும் போட்டிகளில் லக்ஸ் கோஸியின் விளம்பரங்கள் இடம்பெறாது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "லக்ஸ் கோஸியுடனான ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றார் ஷாரூக்கான்"
கருத்துரையிடுக