துபாய்:ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல் மப்ஹூஹ் கொலையில் பங்குவகித்த மேலும் நான்கு நபர்களின் விபரங்களை துபாய் போலீஸ் வெளியிட்டுள்ளது.
இவர்களில் இரண்டு பேர் பிரிட்டீஷ் பாஸ்போர்ட்டிலும், இரண்டுபேர் ஐரிஷ் பாஸ்போர்ட்டிலும் பயணித்துள்ளனர்.இவர்களோடு சேர்த்து மப்ஹூஹை கொல்ல வந்த கொலையாளிகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 11 கொலையாளிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.



ஐரோப்பிய பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி மப்ஹூஹை கொன்ற இஸ்ரேலை ஐரோப்பியன் யூனியன் நாடுகள் வன்மையாக கண்டித்திருந்தன.
source:தேஜஸ் மலையாள நாளிதழ்,khaleejtimes,gulfnews
0 கருத்துகள்: on "மப்ஹூஹ் கொலை: மேலும் 4 குற்றவாளிகளின் விபரங்கள் கிடைத்ததாக துபாய் போலீஸ் தகவல்"
கருத்துரையிடுக