காபூல்:ஆப்கானில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. 2001 ஆம் ஆண்டிலிருந்து ஆக்கிரமிப்பு படையினர் ஆப்கானை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போது வரையிலான புள்ளிவிபரம்தான் இது.
இந்த ஆண்டு 40 தினங்களுக்குள் 54 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானில் அமெரிக்க ராணுவ படையினருக்கு மிகவும் உயிரிழப்பு ஏற்பட்டது இந்த ஆண்டுதான். ராணுவத்தினரின் பலி எண்ணிக்கை 1000 ஐ தாண்டியதைத் தொடர்ந்து நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது. 1657 ஆக்கிரமிப்பு படையினர் ஆப்கானில் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இரண்டு தாலிபான்களின் மூத்த தலைவர்களான முல்லா ரமதான், முல்லா ஷேக் ஆகியோரை கைதுச்செய்துள்ளதாக ஆப்கான் ராணுவ செய்தித்தொடர்பாளர் அப்துல் ரவூஃப் அஹ்மதி தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஆப்கானில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை 1000 தாண்டியது"
கருத்துரையிடுக