மாஸ்கோ:ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு ராணுவப்படையினர் நடத்தி வரும் தாக்குதலில் கூட்டுச் சேரமாட்டோம் என ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனை ரஷ்யாவின் நேட்டோ பிரதிநிதி திமித்ரி ரொகோசின் தெரிவித்தார்.ஆப்கானில் என்ன நடந்தாலும் ராணுவத்தை அனுப்பமாட்டோம் என்பது எங்கள் நிலைப்பாடு என்று அவர் ரஷ்யா ரேடியோவில் தெரிவித்தார்.ஆனால் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள், ராணுவ உதவி, கள்ளக்கடத்தல் உள்ளிட்ட விஷயங்களில் விபரங்களை நேட்டோவுடன் ரஷ்யா பகிர்ந்துக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளான ஜார்ஜியா, உக்ரைன் ஆகியவற்றுக்கு உறுப்பினர் பதவி வழங்கவதற்கான நேட்டோவின் தீர்மானம்தான் ரஷ்யாவின் இம்முடிவிற்கு காரணம் என கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக "ஆபரேசன் முஷ்தரக்" என்ற பெயரில் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் கொல்லப்படுவோர் அப்பாவி மக்களாவர். அமெரிக்கா ஆக்கிரமிப்பு படையினரின் இந்நடவடிக்கை ஆப்கான் மக்களை கடும் கோபத்தையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு படையினரின் இந்த அக்கிரமத் தாக்குதலை ஆப்கான் அதிபர் கர்ஸாயி கண்டித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஆப்கானில் அமெரிக்கத் தலைமையிலான ராணுவ நடவடிக்கையில் கூட்டுச் சேரமாட்டோம்- ரஷ்யா அறிவிப்பு"
கருத்துரையிடுக