4 மார்., 2010

மார்ச் 1முதல் 7வரை சர்வதேச இஸ்ரேலிய இனஒதுக்கல் வாரம்

2005ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கனடா நாட்டின் டொராண்டா பல்கலைக் கழகத்தில் பயிலும் அரபு தேசங்களைச் சார்ந்த மாணவர்களின் செயல்வீரர்கள் ஒன்றிணைந்து சர்வதேச இஸ்ரேலிய இனஒதுக்கல் வாரம் ஒன்றை துவக்கினர். இதனை துவக்கியதின் நோக்கம் இரண்டு காரணங்களாகும். இஸ்ரேலிய இனவெறியை கண்டு கொண்டு வாழாவிருக்கும் உலகின் மெளனத்தை உடைப்பது மற்றும் இன்திஃபாழாவின் போது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரை மற்றும் காஸ்ஸா முனையில் என்ன நடந்தது என்பது குறித்த தவறான புரிதலை நீக்குவது, இரண்டாவது இஸ்ரேலின் அகன்ற சூழமைவுக்கொண்ட இனஒதுக்கல் கொள்கையினால் ஃபலஸ்தீனர்கள் மீது நடத்தப்படும் நேரடி ராணுவத் தாக்குதலை பகிரங்கப் படுத்துவதுமாகும்.

இந்த விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் மூலம் இஸ்ரேல் கட்டிவரும் இனவெறிக் கொண்ட பிரிவினைச் சுவர், ஃபலஸ்தீனர்களின் நிலங்களை ஆக்கிரமித்து யூதர்களுக்கு தாரை வார்த்து குடியேற்றங்களை கட்டுவது, ஃபலஸ்தீனர்களின் அடிப்படை குடியுரிமைச் சட்டங்களையும், அரசியல் உரிமைகளையும் மறுப்பது, ஃபலஸ்தீனிற்கு வெளியேயுள்ள 1948 ஃபலஸ்தீனர்களை சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு அனுமதி மறுப்பது ஆகியன அடங்கும்.

இந்த இஸ்ரேலிய இன ஒதுக்கல் வாரம் துவங்கி 6 ஆண்டுகள் முடிந்துவிட்ட சூழலில் இந்நிகழ்ச்சி 5 கண்டங்களிலிலுள்ள 40 நகரங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சியை கடந்த ஆண்டு நடத்துவதற்கு கனடா நாட்டில் உள்ள பிஸா பல்கலைக்கழகம், கார்லெடான் பல்கலைக்கழகம் ஆகியன இடம் தர மறுத்தன. இந்த ஆண்டு இந்நிகழ்ச்சி உலகின் பல்வேறு நகரங்களில் வருகிற மார்ச் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இப்பிரச்சாரத்தில் உரைகள், போராட்டங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெறும். இஸ்ரேலிய பொருட்களை புறக்கணித்தல், இஸ்ரேலிய பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்தல், இஸ்ரேலிய இனவெறியை பகிரங்கப்படுத்துதல் இப்பிரச்சாரங்களின் நோக்கமாகும்.
source:countercurrents.org

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மார்ச் 1முதல் 7வரை சர்வதேச இஸ்ரேலிய இனஒதுக்கல் வாரம்"

கருத்துரையிடுக