"இந்தியாவில் 13 மாநிலங்களில் இதுவரை சிறுபான்மையினரின் நலனை காக்க தனிப்பட்ட கமிசனை அமைக்கப்படவில்லை" என தேசிய சிறுபான்மை கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது.
மாநில சிறுபான்மை கமிசன்களின் மாநாட்டைக் கூட்ட தேசிய சிறுபான்மை கமிசன் முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் 31-ம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், "இதுவரை சிறுபான்மை கமிசன் அமைக்கப்படாத மாநிலங்கள் விரைந்து கமிசனை அமைக்க வலியுறுத்தப்படும்" என்று தேசிய சிறுபான்மை கமிசன் தலைவர் சஃபி குரேஷி தெரிவித்தார்.
"ஹரியானா, குஜராத், ஒரிஸ்ஸா உள்பட 13 மாநிலங்கள் இதுவரை சிறுபான்மை கமிசனை அமைக்கவில்லை. சிறுபான்மை கமிசனை அமைக்குமாறு அந்த மாநிலங்களிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இதை அந்த மாநிலங்கள் இதுவரை கண்டுகொள்ளவில்லை. வகுப்பு கலவரங்கள் அதிகம் நடைபெறும் குஜராத் மற்றும் ஒரிஸ்ஸா இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை" என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
"நடைபெறவுள்ள மாநில சிறுபான்மை கமிசன்கள் மாநாட்டில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார். மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் பங்கேற்பார். இந்தக் கூட்டத்தின் போது, சிறுபான்மையினர் நலன் காக்க இதுவரை அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, இனிமேல் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பதை எடுத்துரைப்பார்" என்றும் சஃபி குரேஷி தெரிவித்தார்.
source:inneram
0 கருத்துகள்: on "சிறுபான்மை கமிசன் இல்லாத 13 மாநிலங்கள்!"
கருத்துரையிடுக