திருவனந்தபுரம்:மகளிர் தினம் நினைவுக்கூறத் துவங்கி 100 ஆண்டுகளை தாண்டிய பொழுது பெண்களுக்கு எதிரான அதிகார வர்க்கங்களின் தாக்குதல் இன்னும் தணியவில்லை என்பதற்கு நாட்டில் நடந்து வரும் நிகழ்வுகளே சாட்சியாக உள்ளன.
கேரள மாநிலத்திலிலுள்ள குண்டரா என்ற காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டி.ஹெச்.ஆர்.எம் என்ற அமைப்பின் உறுப்பினரான சிந்துப் பெண்மணியை பெண் போலீஸார் உட்பட விசாரணை என்ற பெயரில் வயிற்றில் லத்தியால் கடுமையாக அடித்ததால் கர்ப்பிணியான அந்தப் பெண்மணியின் கர்ப்பம் கலைந்தது.
இவர் இரண்டு தினங்களுக்கும் மேலாக காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதைச் செய்யப்பட்டுள்ளார். அவர் இதனை புகாராக கொல்லம் மாஜிஸ்திரேட்டிடம் சமர்ப்பித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "காவல் துறையின் தாக்குதலில் கர்ப்பம் கலைந்த தலித் பெண்மணி"
கருத்துரையிடுக