18 மார்., 2010

2008-09 ஆம் ஆண்டுகளில் தேசிய சிறுபான்மை கமிஷனுக்கு வந்த புகார்கள 2268

புதுடெல்லி:தேசிய சிறுபான்மை கமிஷன்(NCM) கடந்த 2008-09 ஆம் ஆண்டின் பல்வேறு காலிறுதிகளில் சிறுபான்மையினரிடமிருந்து பெற்ற புகார்களின் எண்ணிக்கை 2268 என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ராஜ்யசபாவில் நேற்று(17/03/10) தெரிவித்தார்.

இந்த ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி வரை ஏராளமான புகார்கள் வந்துள்ளன. புகார்கள் சட்டம்-ஒழுங்கு, பொருளாதாரப் பிரச்சனைகள், கலாச்சார உரிமைகள், மத ரீதியான தொந்தரவு, வக்ஃப் பிரச்சனைகள் மற்றும் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தொடர்பானவையாகும். இவற்றில் எத்தனைப் புகார்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை.

தேசிய சிறுபான்மை கமிஷன் புகார்களை தொலைபேசி வழியாகவும் தெரிவிக்கவும் கட்டணமில்லாத தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. எண்-1-800-11-0088. இவ்வெண்ணில் வேலை நாட்களில் காலை 10 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி:twocircles.net

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "2008-09 ஆம் ஆண்டுகளில் தேசிய சிறுபான்மை கமிஷனுக்கு வந்த புகார்கள 2268"

கருத்துரையிடுக