புதுடெல்லி:ஐக்கிய அரபு அமீரக பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் பின் மக்தூம் இந்தியா டுடே பத்திரிகை ஏற்பாடுச் செய்த நிகழ்ச்சியில் பங்கெடுக்காமல் புறக்கணித்ததற்கு காரணம் அந்நிகழ்ச்சியில் இஸ்லாத்தின் எதிரிகளின் கைக்கூலியும், சர்ச்சைக்குரிய இஸ்லாம் விரோத எழுத்தாளருமான சல்மான் ருஷ்தி பங்கெடுத்ததுதான் காரணம் என செய்திகள் கூறுகின்றன.
இந்தியா டுடே பத்திரிகை ஏற்பாடுச் செய்த கான்க்ளேவ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காகத்தான் ஷேக் முஹம்மது டெல்லிக்கு வருகை புரிந்திருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ’துபாய்-2020’ என்ற தலைப்பில் ஷேக் முஹம்மது உரை நிகழ்த்துவார் என நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தான் பங்கெடுக்கும் அதே நிகழ்ச்சியின் மேடையில் ருஷ்தியும் பங்கெடுக்கிறார் என்பதை அறிந்தவுடன் கடைசி நிமிடத்தில் தனது பங்கேற்பை ரத்துச் செய்தார் ஷேக் முஹம்மது.
மேடையில் ருஷ்தி பங்கேற்கிறார் என்பதை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் துபாய் ஆட்சியாளரின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவிற்கு வந்த ஷேக் முஹம்மதிடம் கடைசி நேரத்தில் கிடைத்த தகவலை துபாய் ஆட்சியாளரின் அலுவலகம் ஷேக் முஹம்மதிற்கு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் தான் நிகழ்ச்சியில் பங்கேற்பதை ரத்துச் செய்தார்.
துபாயில் சில அவசர பணிகள் இருப்பதால் ஷேக் முஹம்மது உடனடியாக திரும்பிவிட்டார் என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் விளக்கம் அளித்திருந்தனர்.
ஷேக் முஹம்மதிற்கு பதிலாக எமிரேட்ஸ் குரூப் சேர்மன் ஷேக் முஹம்மது பின் ஸஈத் அல் மக்தூம் உரை நிகழ்த்தினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மேடையில் ருஷ்தி:நிகழ்ச்சியை புறக்கணித்தார் துபாய் ஆட்சியாளர்"
கருத்துரையிடுக