18 மார்., 2010

இத்தாலியின் இந்தியத் தூதர் ஆரிஃப்கான் மரணமடைந்தார்

ரோம்:இத்தாலியில் இந்தியத் தூதரும் மூத்த ஐ.எஃப்.எஸ் அதிகாரியுமான ஆரிஃப் ஷாஹித் கான் ரோமில் மரணமடைந்தார்.

58 வயதான ஆரிஃப் கான் நுரையீரல் புற்றுநோய் காரணமாக சிகிட்சை பெற்றுவந்தார். ஏற்கனவே சிரியா நாட்டில் இந்தியத் தூதராக பணியாற்றிய கான் பொது தூதரக பிரதிநிதி பிரிவின் துணைச்செயலாளர், வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருந்தார்.

1975 ஆம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் பேட்சில் உட்பட்ட ஆரிஃப் கான் 2008 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இத்தாலி தூதராக பதவியேற்றார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இத்தாலியின் இந்தியத் தூதர் ஆரிஃப்கான் மரணமடைந்தார்"

கருத்துரையிடுக