இஸ்லாமாபாத்:தாக்குதலுக்கு திட்டமிட்டார்கள் என்று குற்றஞ்சாட்டி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட ஐந்து அமெரிக்க குடிமகன்களுக்கெதிராக தீவிரவாத குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.
ஸர்கோடாவிலிலுள்ள சிறை நீதிமன்றம்தான் 18 வயதிற்கும், 25 வயதிற்குமிடையேயான ஐந்துபேரையும் விசாரணைச் செய்தது. அல்காயிதா தொடர்புடைய இயக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்த இவர்கள் முயற்சிச் செய்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்தான் இவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்கள் ஐந்துபேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும். ஏற்கனவே இவர்களை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதை நீதிமன்றம் தடைச்செய்திருந்தது.
அமெரிக்க அதிகாரிகளின் தூண்டுதலால் தங்களை சிறையில் சித்திரவதைப்படுத்தியதாக கைதுச்செய்யப்பட்ட அமெரிக்கர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் இதனை சிறை அதிகாரிகளும், அமெரிக்காவும் மறுத்துள்ளது. அமெரிக்காவின் வெர்ஜீனியாவிலிருந்துதான் இவர்கள் ஐந்துபேரும் காணாமல் போயினர்.
பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் தாக்குதலுக்கு இவர்கள் ஐந்துபேரும் திட்டமிட்டிருந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றஞ் சாட்டுகிறார். ஆனால், தங்களுக்கு அல்காயிதாவுடன் எந்தவொரு தொடர்பும் இல்லையென்றும், தாங்கள் மனிதநேய உதவிகளைச் செய்வதற்காகவே ஆப்கானிஸ்தானிற்கு வந்ததாகவும் கைது செய்யப்பட்ட அமெரிக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஐந்து அமெரிக்கர்களுக்கெதிராக பாகிஸ்தான் தீவிரவாதக் குற்றச்சாட்டு"
கருத்துரையிடுக