ஸ்ரீநகர்:வன்முறையால் சிதைந்துபோன எல்லை மாநிலமான கஷ்மீரில் 37,400 விதவைகளும், 97,200 அநாதைகளும் உள்ளனர் என ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
முடிவுறாத போராட்டத்தின் காரணமாக எல்லை மாநிலத்தில் ஏற்பட்ட இச்சூழல் ஒரு பலகீனமான சமூகத்தின் மிக மோசமான சூழலை எடுத்தியம்புவதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
2008 ஆம் ஆண்டு கணக்கின்படி கஷ்மீரில் 37,400 விதவைகளும், 97,200 அநாதைகளும் இருந்தனர். இது தற்ப்போது அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தீவிரமடையும் ஆயுத மோதல்கள் மனித வாழ்க்கையை பேரழிழப்புக்கு ஆளாக்குகின்றது.
இந்த ஆய்வை மேற்க்கொண்டவர் பிரபலமான சமூகவியலாளர் பஷீர் அஹ்மத் தப்லா ஆவார். 1989 முதல் கஷ்மீரில் நடந்துவரும் மோதலால் விதவைகளும், அநாதைகளும் உருவாகின்றனர். இவர்களுக்கு அரசிடமிருந்தோ அல்லது அரசு சாரா நிறுவனங்களிடமிருந்தோ(NGO) போதிய உதவிகள் கிடைப்பதில்லை. அரசும் அரசு சாரா நிறுவனங்களும் முறைப்படுத்தப்பட்ட முறையில் உதவிகளை அளிப்பதில்லை. இந்த மாநில மக்களின் மோசமான சூழ்நிலையை மாற்ற எந்தவொரு சிறப்புத் திட்டமும் அரசால் அறிவிக்கப்படுவதுமில்லை. இந்தப் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.
தனிநபர்கள், சமூகம், அரசு ஆகியன இவர்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கான பொறுப்பை பகிர்ந்துக் கொண்டு ஒருங்கிணைந்த, அமைப்பு ரீதியான, போதிய நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும் என்று அந்த ஆய்வு உறுதிப்படக் கூறுகிறது.
செய்தி:twocircles.net

0 கருத்துகள்: on "கஷ்மீரில் 37,400 விதவைகள், 97,200 அநாதைகள்- ஆய்வில் தகவல்"
கருத்துரையிடுக