அண்ணா பல்கலைகழகத்தின் 30ம் ஆண்டு விழா கடந்த பிப்ரவரி19 அன்று பல்கலைகழக வேந்தரும் தமிழக ஆளுநருமான பர்னாலா தலைமையில் நடந்தது.
2009 ஆம் ஆண்டுக்கான பி.ஆர்க்(B.Arch.. ) கட்டிடக்கலைப் பிரிவில் ஐந்தாண்டு பட்டப் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவியாய்த் தேறி, ஆளுநரிடமிருந்து தங்கப் பதக்கமும் பத்தாயிரம் ரூபாய் காசோலையும் பெற்றுள்ளார் ஆயிஷா கானம் எனும் மாணவி.
மியாஸி அகாடமியில் பயின்ற ஆயிஷா கானம் சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் பேக் அவர்களின் மகள் ஆவார். மியாஸி வரலாற்றிலேயே முதல் முறையாக மாநில அளவில் முதலிடம் பெற்ற ஆயிஷா கானம் தாம் பயின்ற கல்வி நிறுவனத்திற்கு மட்டுமின்றி, சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பல்கலைகழக விழாவின் போது ஹிஜாபுடன் கலந்து கொண்டு ஆளுநரிடம் பரிசுகளைப் பெற்று, படிப்புக்கும் முன்னேற்றத்திற்கும் பர்தா ஒரு தடையே அல்ல என்பதையும் மெய்ப்பித்துள்ளார்.
வாழ்த்துக்கள் ஆயிஷா..!
வாழ்த்துக்கள் ஆயிஷா..!
source:சமரசம் மார்ச்2010
0 கருத்துகள்: on "கட்டிடக்கலை படிப்பில் மாநில அளவில் முதலிடம் பெற்ற ஆயிஷா கானம்"
கருத்துரையிடுக