புதுடெல்லி:போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தாருக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க டெல்லி போலீஸுக்கு தேசிய மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குற்றவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்டு மந்தீப் சிங் டெல்லி போலீஸால் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கெதிராக தற்ப்பொழுது வழக்கு நடந்து வந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய மனித உரிமை கமிஷன் கூறியுள்ளது.
ஜாரோதாகலானில் வைத்து சாதாரண உடையில் வந்த போலீஸார் மந்தீப் சிங்கை பிடித்துச் சென்று சுட்டுக்கொன்றனர். பின்னர் மந்தீப் போலீசாருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார் என பொய் கூறினர். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ இவ்வழக்கை விசாரித்ததில் மந்தீபின் கொலை போலி என்கவுண்டர் எனக் கண்டறிந்தது. சி.பி.ஐ விசாரணையில் கண்டறிந்தததின் அடிப்படையில் மந்தீபின் குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தேசிய மனித உரிமை கமிஷன் கூறியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "போலி என்கவுண்டர் கொலை:5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தேசிய மனித உரிமை கமிஷன் உத்தரவு"
கருத்துரையிடுக