புதுடெல்லி:திருமணம் முடிக்காமல் ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்வதிலோ அல்லது உடல்ரீதியான உறவிலோ தவறில்லை எனவும் அதனைத் தடுக்க சட்டத்தில் இடமில்லை என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
தமிழ் நடிகை குஷ்பு 2005 ஆம் ஆண்டில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஆணும், பெண்ணும் திருமணம் முடிக்காமல் இணைந்து வாழ்வது தவறில்லை என்ற அடிப்படையில் கருத்து தெரிவித்திருந்தார். அவருடைய கருத்திற்கெதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் 22 வழக்குகளும் குஷ்புவுக்கெதிராக தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்டன.
இதனைத் தொடர்ந்து குஷ்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்மீது தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடிச் செய்யக் கோரினார்.ஆனால் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடுச் செய்தார். அந்த வழக்கில்தான் நீதிபதிகளான கே.ஜி.பாலகிருஷ்ணன், தீபக் வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இக்கருத்தை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்றம் ஓரினச்சேர்க்கை தவறில்லை எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "திருமணம் முடிக்காமல் ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்வதில் தவறில்லை: சுப்ரீம் கோர்ட்"
கருத்துரையிடுக