கம்பாலா:வடக்கு உகாண்டாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் மரணித்த 90 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 300 பேரைக்காணவில்லை எனவும், அவர்களை தேடும்பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டார்சிஸ் கப்வெஜிரே தெரிவித்தார்.
எல்கோன் மலையடிவாரத்திலிலுள்ள பதூடா மாவட்டத்தில்தான் கனத்த மழையைத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான வீடுகளும், கட்டிடங்களும் மண்ணிற்கு அடியில் புதைந்துள்ளன.
மழைத் தொடர்ந்து பெய்வதால் மீட்புப்பணியில் தடை ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும், பாதுகாப்பான இடமும் தயார்ச் செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனை ரெட்க்ராஸும், அரசும் செய்துள்ளன.
உகாண்டாவிலும், பக்கத்துநாடான கென்யாவிலும் ஒரு மாதமாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "உகாண்டாவில் நிலச்சரிவு:90 உடல்கள் மீட்பு 300 பேரை காணவில்லை"
கருத்துரையிடுக