கொலை வழக்கில் சாட்சியை முதலில் விசாரணைக்கு அழைப்பது உலக ரீதியான மரபு. ஆனால் ஆஸ்மியின் வழக்கிலோ இந்த மரபு மறக்கவும் மற்றும் புறக்கணிக்கவும் பட்டுள்ளது.
இந்த வழக்கின் முக்கிய சாட்சியாளரும், கொலையாளிகளை நேரில் கண்டவருமான ஆஸ்மியின் உதவியாளர் இந்தரை, போலீஸாரால் கைது செய்யப்பட்ட கூலிப்படையினரை அடையாளம் காட்டுவதற்கு கூட அழைக்கப்படவில்லை என்பது எதார்த்தாமான உண்மை.
தீவிரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களுக்கு வாதாடுவதில் மிகவும் பிரபலமானவர் சாஹித் ஆஸ்மி. ஆஸ்மி கொலை நடந்த பிப்ரவரி 11 தேதியிலிந்து மூன்று நாட்களுக்கு பிறகு MCOC actன் கீழ் மூன்று கூலிப்படையினரை மஹாராஸ்டிர மாநில போலிஸார் கைது செய்தனர். ஆனால் விசாராணையை கையாண்ட விதத்தை கண்டு ஏமாந்த ஆஸ்மியின் குடும்பத்தினர், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சக வக்கீல்கள் கொலை வழக்கினை CBI விசாரணைகாக உத்தரவு விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விசாரணையின் ஏமாற்றத்தை கண்ட ஆஸ்மியின் சகோதரர் கூறுகையில், கொலையாளிகளை நேரில் கண்ட வரும் கொலையாலிகளால் துப்பாக்கி முனையில் மிரட்டபட்டவருமான இந்தரை இது வரை போலிசார் விசாரணைக்காக அழைக்கவில்லை. நாங்கள் முழுவதுமாக இவ்வழக்கில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.
கொலை செய்யப்பட்ட பிறகு இந்தரின் வாக்குமூலத்தை வைத்து கைது செய்யப்படவர்கள் கூலிபடையினர்களாக இருந்தாலும், கொலையின் விசாரணையை கண்டறிய இது வரை அழைக்கப்படாதது போலிசாரின் ஒரு தலைபட்சமா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
மேலும் இக்கொலையின் கீழ் கைது செய்யப்பட்ட மூன்று கூலிப்படையினரும் போலிசாரால் வேறு வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளிகள் ஆவர். அதுமட்டுமல்லாமல், ஆஸ்மி கொலை செய்யபட்டு மூன்றே நாட்களில் கைது செய்யபட்ட இக்கூலிபடையினரும் மற்றும் இவர்கள் ஆஸ்மி வசித்து வந்த இடத்தையே சார்ந்தவர்களாக இருந்ததாலும் மற்றும் விசாரணைகாக ஆஸ்மியின் குடும்பத்தினரும் உதவியாளரும் இதுவரைகும் புறக்கணிக்கபட்ட விதத்தை கண்டால் விசாரணை வழி மாறி செல்வதை உறுதிப்படுத்துகிறது.
மேலே கூறபட்டது மட்டுமல்லமல், போலிசார் கூறுகையில் "கூலிப்படையினர் தான் அஸ்மியின் கொலையை செய்ததாகவும், ஆனால் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று கூருவது விளையாட்டுதனமாக உள்ளது. இதுவரை நடந்த விசாரனையின்படி போலிசார் கொலையை குறித்து தகவல்கள் மற்றும் நடவடிக்கை எதுவும் அளிக்கவில்லை. இதற்க்கிடையில் CBI விசாரணைக்காக மக்களின் கோரிக்கை வலுக்கிறது.
source:தெஹல்கா
0 கருத்துகள்: on "ஆஸ்மி கொலை வழக்கு விசாரணையில் தோய்வு"
கருத்துரையிடுக