
நீதித் துறையில் ஒரு தரத்தை உருவாக்கவும், சுப்ரீம் கோர்ட் அல்லது ஐகோர்ட் நீதிபதிகளின் தவறான செயல்பாடுகளை கையாள்வதற்கான செயல்பாட்டு முறையை உருவாக்கவும், 'நீதித் துறையின் தரம் மற்றும் பொறுப்புடமை மசோதா 2010' என்ற சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
இதன் வரைவு நகல் தற்போது தயாராகியுள்ளது. இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:
*ஒரு வழக்கில் வாதி மற்றும் பிரதிவாதி தரப்பிலான வாதங்கள் முடிவடைந்த பின், மூன்று மாதங்களுக்குள் அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி தீர்ப்பு வழங்க வேண்டும். அதற்கு மேல் காலம் தாழ்த்தக் கூடாது.
*நீதிபதிகள் தங்களின் சொத்துக்கள் மற்றும் கடன் விவரங்களை கட்டாயமாக வெளியிட வேண்டும்.
*ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பணிபுரிவோர், நீதித் துறை பணியில் பாரபட்சமின்றி, நடுநிலைமையோடு செயல்பட வேண்டும். மதம், இனம், பாலிடம், சாதி மற்றும் பிறந்த இடம் என்ற அடிப்படையில், யாருக்கும் சலுகை காட்டக்கூடாது.
*நீதிபதிகள் எந்த கிளப் அல்லது சங்கத்தின் தேர்தலிலும் போட்டியிடக் கூடாது.
*வக்கீல்கள் யாருடனும் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.
தாங்கள் விசாரிக்கும் வழக்குகளில், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் ஆஜராக அனுமதிக்கக் கூடாது.
தாங்கள் விசாரிக்கும் வழக்குகளில், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் ஆஜராக அனுமதிக்கக் கூடாது.
*உறவினர்களைத் தவிர மற்றவர்களிடம் இருந்து பரிசுப் பொருட்களையோ அல்லது சலுகைகளையோ பெறக்கூடாது.
*ஏதாவது ஒரு கம்பெனியின் பங்குகளை வைத்திருந்தால், அந்த கம்பெனி தொடர்பான வழக்குகளை விசாரிக்கக் கூடாது.
*நீதிபதிகள் தாங்கள் அளித்த எந்த ஒரு தீர்ப்பு பற்றியும் மீடியாக்களுக்கு பேட்டி தரக்கூடாது.
*அரசியல் விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கவோ அல்லது பொது விவாதங்களில் பங்கேற்கவோ கூடாது.
*நீதிபதி ஒருவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக அல்லது லஞ்சம் பெற்றதாக புகார்கள் வந்தால், அது பரிசீலனை கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த புகார் உண்மை என, பரிசீலனை கமிட்டி கண்டறிந்தால், அதை நீதித்துறை மேற்பார்வை கமிட் டிக்கு பரிந்துரை செய்யும். அந்த கமிட்டி அதை பரிசீலித்த பின், சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் படி, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும்.
*நீதித்துறை மேற்பார்வை கமிட்டிக்கு துணை ஜனாதிபதியான, ராஜ்யசபா தலைவர் தலைமை வகிப்பார். அதில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியும், ஐகோர்ட் தலைமை நீதிபதி ஒருவரும், இரண்டு சட்ட நிபுணர்களும் இடம் பெறுவர்.
*பரிசீலனை கமிட்டி, நாட்டில் உள்ள 21 ஐகோர்ட்களிலும் அமைக்கப்படும்.
source:dinamalar
0 கருத்துகள்: on "வாதங்கள் முடிந்த மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு : வருகிறது புது சட்டம்"
கருத்துரையிடுக