19 மார்., 2010

கேரளா:மாராடு அபூபக்கர் கொலைவழக்கில் 9 பேருக்கு ஆயுள்தண்டனை

கோழிக்கோடு:மாராடு தெக்கப்புறத்து அபூபக்கரை வெட்டிக் கொன்ற வழக்கில் கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கு மாராடு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

முதல் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ஹிந்து ஐக்கியவேதி என்ற சங்க்பரிவார அமைப்பின் மாநில செயலாளர் டி.சுரேஷ் உட்பட 4 குற்றவாளிகளுக்கு 5 வருட கடுஞ்சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார் மாராடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கெ.பி.பிரசன்னகுமாரி.

மொத்தம் 14 குற்றவாளிகளில் 8-வது நபர் சுமேஷ் என்பவரை போதிய ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் விடுதலைச்செய்தது. 2002 ஆம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி தெக்கப்புறத்து அபூபக்கர் கொல்லப்பட்டார்.

ஜனவரி 3-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்ட யூனுஸ், குஞ்ஞுக்கோயா ஆகியோரை அடக்கம் செய்வதற்காக போகும் வழியில் வலியப்பள்ளியின் அருகில் வைத்து அபூபக்கரை ஹிந்து பயங்கரவாதிகள் வெட்டிக் கொலைச்செய்தனர். இவ்வழக்கில் 55 சாட்சிகளும்,கண்டெடுத்த 25 பொருட்களும், 40 ஆவணங்களும் நீதிமன்றம் ஆய்வுச்செய்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கேரளா:மாராடு அபூபக்கர் கொலைவழக்கில் 9 பேருக்கு ஆயுள்தண்டனை"

கருத்துரையிடுக