19 மார்., 2010

செப்டம்பர் 11 தாக்குதல்:புலனாய்வு குழுவின் தீவிர விசாரணையை தடுத்த அமெரிக்க அதிகாரிகள்

வாஷிங்டன்:செப்டம்பர் 11 தாக்குதல் புலனாய்வுச் செய்யும் குழுவிடம் அந்நிகழ்வைக் குறித்து ஆழமான விசாரணைத் தேவையில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புலனாய்வுக் குழுவுக்கு ரகசியமாக அளிக்கப்பட்ட கடிதத்தில்தான் இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடிதத்தின் நகல் அமெரிக்கன் சிவில் லிபர்டீஸ் யூனியனுக்கு கிடைத்ததால் அமெரிக்க அதிகாரிகளின் தலையீடு பகிரங்கமானது. நாட்டின் பாதுகாப்பு கருதி தாக்குதல் தொடர்பாக ஆழமான விசாரணை தேவையில்லை என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி அன்றைய அட்டர்னி ஜெனரல் ஜாண் ஆஷ்க்ராஃப்ட், பாதுகாப்புத்துறைச் செயலாளர் டெனால்ட் ரம்ஸ்பெல்ட், சி.ஐ.ஏ இயக்குநர் ஜார்ஜ் டெனட் ஆகியோர் அக்கடிதத்தில் ஒப்பிட்டுள்ளனர். 2002 ஆம் ஆண்டு உலக வர்த்தகமையம் அமைந்த இரட்டைக் கோபுரத்தை தாக்கியதை புலனாய்வுச் செய்ய கமிஷன் நியமிக்கப்பட்டது.

செப்டம்பர் 11 தாக்குதல் அமெரிக்க தலைமையில் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது இக்கடிதம். சமீபத்தில் நடத்திய ஒரு சர்வேயில் அமெரிக்காவின் நான்கில் ஒரு பகுதியினரும் செப்டம்பர் 11 தாக்குதல் புனையப்பட்டது என கருத்து தெரிவித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "செப்டம்பர் 11 தாக்குதல்:புலனாய்வு குழுவின் தீவிர விசாரணையை தடுத்த அமெரிக்க அதிகாரிகள்"

கருத்துரையிடுக