19 மார்., 2010

உஸாமாவும், ஜவாஹிரியும் பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை: சி.ஐ.ஏ

வாஷிங்டன்:அல்காயிதா தலைவர் உஸாமா பின் லேடனும், துணைத்தலைவர் அய்மான் அல்ஜவாஹிரியும் பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாக அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ கூறுகிறது.

வடக்கு வஸீரிஸ்தானில் அல்லது வடக்கு பழங்குடியினர் பகுதியிலோ உள்ள பாதுகாப்பு மையத்தில் அவர்கள் வாழ்ந்து வருவதாக சி.ஐ.ஏவின் தலைவர் லியோன் பனேட்டா வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் அமெரிக்காவின் தாக்குதல் அல்காயிதாவின் தலைமையகத்தை துயரத்திற்குள்ளாக்கியதாகவும், அவர்கள் புதிய மறைவிடங்களை தேடுவதாகவும் கூறிய பனேட்டா பாகிஸ்தான் உளவு அமைப்பு உளவுத் தகவல்களை குறித்த நேரத்தில் பரிமாறிக் கொள்வதாகவும் தெரிவித்தார். அதேவேளையில் உஸாமாவை உயிருடன் கைதுச்செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதே தங்களது நோக்கம் என ஆப்கானில் அமெரிக்க ராணுவ தலைவர் ஸ்கான்லி மக்கிறிஸ்டல் தெரிவிக்கிறார்.

ஆப்கானில் அவர்கள் எங்குச் சென்றாலும் பிடிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.ஆனால் உஸாமாவை உயிருடன் பிடிப்பது நடக்கவியலாத செயல் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ஐரிக் ஹோல்டர் தெரிவிக்கிறார். உஸாமா எங்கிருக்கிறார் என்பதுக் குறித்து எந்தவொரு விபரமும் தற்ப்பொழுது அமெரிக்காவின் வசம் இல்லை என பாதுகாப்புத்துறை செயலாளர் ரோபர்ட் கேட்ஸ் தெளிவுப்படுத்தியுள்ளார்.

2003 ஆம் ஆண்டிலிருந்து உஸாமா எங்கிருக்கிறார் என்பதைக் குறித்து எந்தவொரு விபரமும் இல்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உஸாமாவும், ஜவாஹிரியும் பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை: சி.ஐ.ஏ"

கருத்துரையிடுக