வாஷிங்டன்:2008 ஆம் ஆண்டில் காஸ்ஸாவின் மீது இஸ்ரேல் நடத்திய கொடூர ஆக்கிரமிப்புத் தாக்குதலில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்களைக் குறித்து விசாரணைச் செய்வதில் இஸ்ரேல் அரசு தோல்வியுற்றதாக ஐ.நா வின் மனித உரிமை கமிஷனர் நவிப்பிள்ளை குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில்தான் இஸ்ரேல் விசாரணை போதுமானதல்ல எனக்கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய போர்க்குற்றங்களைக் குறித்து ஐ.நாவால் நியமிக்கப்பட்ட கோல்ஸ்டோன் அறிக்கையிலும் இஸ்ரேலை கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது.
சாதாரணமக்கள் அதிகமாக வாழும் பகுதிகளிலும் குண்டுவீசி மக்களை வேண்டுமென்றே இஸ்ரேல் கொலைச் செய்ததாக கோல்ஸ்டோன் அறிக்கை கூறியிருந்தது. போர் மூலம் துயரத்தில் ஆழ்ந்துள்ள காஸ்ஸா மக்களுக்கு சர்வதேச உதவிகள் கிடைப்பதையும் இஸ்ரேல் ராணுவம் தடுத்ததாகவும் கோல்ஸ்டோன் அறிக்கை விவரிக்கிறது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் போர்க்குற்றங்களை சுதந்திரமாக விசாரணைச்செய்யவேண்டும் என்று கோரி ஐ.நா பொதுச்சபை இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தது. கடந்த புதன்கிழமை ஐரோப்பிய பாராளுமன்றமும் கோல்ட்ஸ்டோன் அறிக்கையை ஒப்புக்கொண்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "காஸ்ஸா போர் குற்றம்:இஸ்ரேல் விசாரணை போதுமானதல்ல- ஐ.நா"
கருத்துரையிடுக