19 மார்., 2010

நைஜீரியா பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

அபூஜா:அரசியல் ஸ்திரத்தன்மையின் காரணமாக நைஜீரியா பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. இதனை அதிபர் பொறுப்பு வகிக்கும் துணை அதிபர் குட்லக் ஜோனதான் அறிவித்துள்ளார்.

புதிய மந்திரிசபை உடனே உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார். பாராளுமன்றம் கலைத்துவிட்டதற்கான காரணம் விளக்கப்படவில்லை. அதிபர் உமரோ அதூவா ஆரோக்கியக் காரணங்களால் பொறுப்பிலிருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 19 ஆம் தேதி ஜோனதான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதிபர் அதிகாரத்தில் தொடரவேண்டுமென்றும் இல்லாவிட்டால் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கோரி நைஜீரியாவில் போராட்டம் ஆரம்பித்துள்ளது. ஆனால் 2011 ஆம் ஆண்டுதான் தேர்தல் நடைபெறும். அதுவரை தற்காலிக அமைச்சரவையை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

36 மாநிலங்களிலிருந்து கவர்னர்கள் மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்கள் ஆகியோரிலிருந்து அமைச்சரவை உறுப்பினர்களை அறிவிக்கப்படும்.அதேவேளையில் நைஜீரியாவில் ராணுவப்புரட்சிக்கு வாய்ப்பு உள்ளதாகவும் பத்திரிகைகள் கூறுகின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நைஜீரியா பாராளுமன்றம் கலைக்கப்பட்டது"

கருத்துரையிடுக