வாஷிங்டன்:இஸ்ரேலுடன் தூதரக பிரச்சனை ஒன்றுமில்லை என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெளிவுப்படுத்தியுள்ளார்.
கிழக்கு ஜெருசலமில் கூடுதல் குடியேற்ற வீடுகளை கட்டுவதற்கான முயற்சி சமாதான பேச்சுவார்த்தைக்கு தடை ஏற்படுத்தினாலும் இதன் பெயரிலான எதிர்ப்பு இரு நாடுகளுக்கிடையேயான உறவை பாதிக்காது. அமெரிக்காவிற்கு இஸ்ரேலுடன் மிக நெருங்கிய உறவாகும். பரஸ்பரம் அவமானப்படுத்தவோ புறக்கணிப்பதற்கோ முடியாது. இவ்விஷயத்தை துணை அதிபர் ஜோ பைடனின் இஸ்ரேல் சுற்றுப் பயணவேளையில் விளக்கியுள்ளதாகவும் ஒபாமா தெரிவிக்கிறார்.
பைடன் சுற்றுப் பயணம் செய்யும் வேளையில் புதிய குடியேற்றங்களை கட்டுவதற்கான இஸ்ரேலின் அறிவிப்பிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து ஒபாமா தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேலின் சட்டத்திற்கு புறம்பான குடியேற்ற நிர்மாணத்திற்கெதிராக ஃபலஸ்தீனர்கள் நடத்திவரும் போராட்டத்தை ஒபாமா கண்டிக்கிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இஸ்ரேலுடன் தூதரக உறவில் எந்தவித பிரச்சனையும் இல்லை ஒபாமா"
கருத்துரையிடுக