நாம் அனைவரும் அறிவோம், அல்லாஹ்வின் தூதரின் தோழர்கள் நபி(ஸல்...)அவர்களின் பிறந்த நாளையோ, ஹிஜ்ரி புத்தாண்டையோ, பத்ருப்போர் நடந்த தினத்தையோ விழாவாகக் கொண்டாடவில்லை என்று. ஏனெனில் அவர்கள் அந்த நபி(ஸல்...) அவர்களின் வாழ்நாளில் அதனையெல்லாம் நேரடியாக கண்ட சாட்சிகள். மேலும் அவர்கள் அந்நிகழ்வுகளை என்றும் தங்கள் உள்ளங்களில் பாதுகாத்து வந்தார்கள்.
சஅத் அபீவக்காஸ்(ரலி...) கூறுகிறார்கள்: "நாங்கள் ஆர்வத்துடன் எங்கள் குழந்தைகளுக்கு நபி(ஸல்...) அவர்களின் வாழ்நாளில் நடந்த போரின் வரலாறுகளையெல்லாம் சொல்லிக் கொடுத்தோம்". மேலும் முறையாக குர்ஆனையும் கற்றுக் கொடுத்தோம் என்கிறார்கள்.
நபித்தோழர்கள் நபிகளாரின் வாழ்நாளில் நடந்தவைகளை தங்கள் குழந்தைகளுக்கு நினைவூட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆதலால் நபிகளாரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. ஆயினும் தொடர்ந்து வந்த தலைமுறைகள் அந்த மேன்மைப் பொருந்திய வரலாற்றையும், அதன் முக்கியத்துவத்தையும் மறக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆதலால் அத்தகையதொரு விழாக்கள் நடத்தப்பட்டால் அவைகள் அந்த மிகப்பெரிய நிகழ்வுகளை உயிர்ப்பிப்பதாகவும், அதன்மூலம் அதன் மதிப்பீடுகளை அந்த வரலாற்றிற்கு சொந்தக்காரர்களிடமிருந்து கற்கும் விதத்திலும் அமையவேண்டும்.
நபிகளாரின் வாழ்வையும் அவர்களுடைய அழைப்பையும் நினைவூட்டுவதற்காக துவங்கப்பட்ட இவ்விழாக்களில் எதிர்பாராதவிதமாக நவீனங்கள்(பித்அத்) நுழைந்துவிட்டன. உண்மையில் நபிகளாரின் பிறந்தநாளை கொண்டாடுவது என்பது இஸ்லாத்தின் மறுவரவைக் கொண்டாடுவது போலாகும். இத்தகைய நிகழ்ச்சிகளின் நன்னோக்கம் மக்களுக்கு நபிகளார் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை நினைவூட்டுவதற்காக இருக்கவேண்டும்.
அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்: "அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது." (அல்குர்ஆன் 33:21).
நபி(ஸல்...)அவர்கள் மேற்க்கொண்ட ஹிஜ்ராவைக் கொண்டாடும் பொழுது மக்களுக்கு ஹிஜ்ராவின் படிப்பினைகளையும், தியாகத்தையும், நபித்தோழர்களின் தியாகத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அலீ(ரலி...)அவர்களின் தியாகம், அவர்கள் நபி(ஸல்...)அவர்கள் ஹிஜ்ரத் புறப்பட்டபிறகு அவர்களுக்கு பகரமாக மக்காவிலிலுள்ள அவர்களுடைய வீட்டின் படுக்கையில் எதிரிகளுக்கு பயப்படாமல் படுத்திருந்தார்களே! அதனை நினைவுக் கூறவேண்டும். ஹிஜ்ரத்தின் போது நபிகளாரை சந்திக்க தவ்ர் குகைக்கு ஏறிச்சென்ற அஸ்மா(ரலி...)அவர்களின் தியாகத்தை நினைவுக் கூறவேண்டும். ஹிஜ்ரத்தின் போது நபிகளார் எவ்வாறு அதனை திட்டமிட்டார்கள், எவ்வகையிலான வழிகளை தேர்ந்தெடுத்தார்கள் என்பதையெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
ஹிஜ்ரத்தின் போது தவ்ர் குகையில் அபூபக்கர்(ரலி...)அவர்கள் கேட்டக்கேள்விக்கு நபி(ஸல்...)அவர்கள் அளித்த பதிலை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்: "நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றிய போது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், "கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்" என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்." (அல்குர்ஆன் 9:40).
நாம் இந்த தினங்களை கொண்டாடும் பொழுது அவற்றிலிருந்து கிடைக்கும் பாடங்களையும், மதிப்பீடுகளையும் நினைவுறுத்த வேண்டும். நான் நினைக்கிறேன் இந்த தினங்கள் முறையாக கொண்டாடப்படுமானால் நாம் அவற்றை மிகப்பெரிய நன்னோக்கத்திற்கு பயன்படுத்தியதாக ஆவோம். இதன் மூலம் முஸ்லிம்களை இஸ்லாத்தின் கொள்கைகள், நபி(ஸல்...)அவர்களின் சுன்னத் மற்றும் வாழ்க்கையோடு மக்களை நெருங்கச் செய்ய இயலும்.
ஆஷூரா நாளை நபிகளார் கொண்டாடியது எவ்வாறு? நோன்பு மட்டுமே நோற்றார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மதீனாவிற்கு வருகை தந்தபொழுது அங்குள்ள யூதர்கள் இந்த 10-வது நாளில் நோன்பு வைத்திருப்பதைக் கண்டார்கள். இவ்வாறு நோன்பிருப்பதின் விசேஷம் என்ன என்பதை அறிய நபி(ஸல்...)அவர்கள் யூதர்களை பார்த்து வினவினார்கள். அதற்கு அந்த யூதர்களோ "இன்றைய நாளில்தான் இறைவன் நபி மூஸா(அலை...) அவர்களை பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றி, பிர்அவ்னையும், அவனுடைய கூட்டத்தினரையும் கடலில் மூழ்கடிக்கச் செய்தான் என்றும், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நபி மூஸா(அலை...) அன்று நோன்பிருந்தார்கள். எனவே நாங்களும் நோன்பிருக்கிறோம்.என்று விடை பகர்ந்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்...)அவர்கள் நபி மூஸா(அலை...) அவர்களை பின்பற்றுவதில்(முஸ்லிம்களாகிய) நாங்கள் தான் உங்களைவிட தகுதியானவர்கள் என்று கூறி அந்த நாளில் நோன்பு நோற்றார்கள். மேலும் அனைவரையும் நோன்பு நோற்குமாறும் கூறினார்கள். மேலும் இனிவரும் ஆண்டில் நான் உயிரோடிருந்தால் முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்கள் நோன்பு நோற்பேன்" என்றும் நபி(ஸல்..)அவர்கள் அறிவித்தார்கள். (நூற்கள்: புஹாரி,முஸ்லிம்).
ஆயினும் சில சுன்னத்வாதிகள் இத்தினத்தை விருந்துவை போகங்களுடனும், ஷியாக்கள் துக்கமாகவும் கொண்டாடுகிறார்கள். ஆனால் இவையனைத்தும் பித்அத்துகளாகும். இவை முற்றிலும் இஸ்லாத்திற்கு மாற்றமானது.
நபி(ஸல்...)அவர்களின் பிறந்த தினம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரும்பாலும் ரபியுல் அவ்வல் 9 திங்கள் கிழமை நபிகளார் பிறந்தார்கள் என்பதாகும். ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டு ரபியுல் அவ்வல் 12 திங்கள் கிழமை வஃபாத்தானார்கள்.
source:இஸ்லாம்ஆன்லைன்.நெட்

2 கருத்துகள்: on "இறைத்தூதரின் பிறந்தநாளை விழாவாகக் கொண்டாடலாமா?- டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி"
http://noonvalkalame.blogspot.com/
நபி (sal) அவர்களின் பிறந்த தினத்தில் கருத்து வேறுபாடு இருக்கும் போது., இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தேதி என்று எவ்வாறு கண்டுகொள்வது..?
"சஅத் அபீவக்காஸ்(ரலி...) கூறுகிறார்கள்: 'நாங்கள் ஆர்வத்துடன் எங்கள் குழந்தைகளுக்கு நபி(ஸல்...) அவர்களின் வாழ்நாளில் நடந்த போரின் வரலாறுகளையெல்லாம் சொல்லிக் கொடுத்தோம்'. மேலும் முறையாக குர்ஆனையும் கற்றுக் கொடுத்தோம் என்கிறார்கள்."
நினைவுகூருவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது., முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்.., ஆனால் எடுத்து வைக்கப்பட்ட இந்த ஹதீஸ் கூட நபி (sal) அவர்களின் பிறந்த தினத்தில் தான் நினைவு கூறவேண்டும் என்று கூறவில்லை.. எப்போதும் நினைவு கூற வேண்டும் என்ற கருத்துப்பட தான் வந்துள்ளது என்பதை கவனியுங்கள்.. அல்லாஹ்வையும் அவனது திரு தூதராகிய முஹம்மது முஸ்தபா ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் தியாக வரலாறையும் என்றென்றும் நினைவு கூற வேண்டும் என்பதே உண்மை.. அதில் மாற்று கருத்து இல்லை.. ஆனால், குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டும் அவரது தியாகத்தை நினைவு கூறுவதற்கு அவர் ஒன்றும் இந்நாளில் வாழ்கின்ற சாதாரண அரசியல் கட்சி தலைவர் அல்ல என்பதை கொஞ்சம் மனதில் வைக்கவேண்டும்.. 'பிறந்தநாள்' என்பதே கூடாது.. பிறந்தநாள் என்ற அந்த பேச்சுக்கே இடம் இல்லை இஸ்லாத்தில்.. 'அவரை நினைவு கூறுவதற்காக அந்த நாளை பயன்படுத்துகிறோம்' என்று கூறுவதும் ஏற்ப்புடயதாக இல்லை.. அவ்வாறு நீங்கள் வாதிடுவதாக இருந்தால் 'நெஞ்சில் கை வைத்து சொல்லவேண்டும்' இவ்வாறு சொல்வது ஏற்புடையது தானா என்று.. நீங்கள் இவ்வாறு அறியாமல் கொடுக்கும் பாத்வாவினால் தான் அதை மக்கள் அவர்கள் தங்களுடைய சவ்கரியத்திர்ற்கு எடுத்து கொள்கிறார்கள்.. ஏன் இந்த நிலை? இஸ்லாத்தில் கூறப்பட்டதை உடைத்து சொல்லிவிட வேண்டும்..
அல்லாஹ் குரான்-இல் கூறவது போல : "(நபியே!) உங்களுக்கு வஹி-யாக அறிவிக்கப்படுவதை (அப்படியே) மக்களுக்கு எடுத்து கூறுவீராக." ஒரு அழைப்பாளியும் எது கூறப்பட்டுள்ளதோ அதை அப்படியே எடுத்து வைத்துவிட வேண்டியது தான்.. அது தான் ஒவ்வொரு முஸ்லிம்-இன் மீதும் கடமை...
நபி (ஸல்) அவர்கள் மார்க்கம் என்று எதை சொல்லவில்லையோ அதை நம் இஷ்ட்டத்திர்க்கு மக்களிடம் புகுத்த கூடாது..
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்: "எனக்கு பின் மார்கத்தில் எந்த ஒன்று புகுத்த படுகிறதோ அது இறைவனால் நிராகரிக்கப்படும்" [ஸஹீஹ் ஹதீத்]
நிராகரிக்கபட்டாலும் பரவா இல்லை,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியார் உம்முல் முஹ்மினீன் ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்
"எவர் ஒருவர் நபி (ஸல்) அவர்களின் இந்த மூன்று விஷயத்தில் 'ஆம்' என்று உறுதிபட கூறுகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டி கட்டி விட்டார்' (அந்த மூன்றில் ஒன்று)
"நபி (ஸல்) அவர்கள் மார்கத்தில் குறை வைத்து விட்டார் (சொல்லாமல் விட்டு விட்டார்)".
நீங்கள் கொடுக்கும் இந்த பாத்வா நபி (ஸல்) தங்கள் பிறந்த நாளை நினைவு கூறும்படி மக்களுக்கு சொல்லாமல் விட்டுவிட்டார் என்ற மறைமுக கருத்தை வெளிப்படுத்துகிறது என்ற முறையில் அல்லாஹ்-வின் மீது மறைமுகமாக பொய்யை இட்டு கட்டுவது என்ற மாபாதக செயலாக உள்ளது.. அல்லாஹ் நம்மை காப்பானாக...
அல்லாஹ்வுக்கு நாம் அஞ்சவேண்டும்.. உண்மையை உணர்ந்து., குரான் ஹதீஸ்-இன் அடிப்படையில் மார்கத்தில் எந்த ஒன்றுக்கும் விளக்கம் சொல்வது தான் தாயீ-க்கு அழகு.. பிறந்தநாள் என்ற ஒன்றே இல்லாத போது அதை நன்மைக்கு பயன்படுத்துகிறேன் என்று கூறுவதே தவறு..
அல்லா கூறுகிறான்: "இந்த நபி உங்களுக்கு எதை ஏவினாரோ அதை எடுத்து கொள்ளுங்கள், எதை விட்டும் தடுத்தாரோ அதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்" [அல்-குர்ஆன்]
நினைவுநாள் கொண்டாடுவது இஸ்லாத்தில் இல்லை அதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டியும் தரவில்லை.. எவர் அதை காட்டி தரவில்லையோ., அவருக்கே நினைவுநாள் கொண்டாடுவது தான் வருத்தத்திற்கு உரிய செயல்..
மக்களே உணர்ந்து செயல் படுங்கள்.. அல்லாஹ் நாம் அனைவரையும் நேர் வழி நடத்துவானாக..
கருத்துரையிடுக