
தற்பொழுது 3 நாள் சுற்றுப் பயணமாக சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங்குடன் உடன் சென்றுள்ள சசி தரூர் சவூதி தலைநகர் ரியாத்தில் பேட்டியளித்த பொழுது, "சவூதி அரேபியா பாகிஸ்தானின் நட்பு நாடு. இதனால், இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதற்கு ஏற்றது சவூதி அரேபியாவாகும்" என்றார்.
ஆனால் சில நிமிடங்களிலேயே, இந்தியா-பாகிஸ்தான் இடையே சவூதி அரேபியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கூறவில்லை என்று சசி தரூர் மறுத்துவிட்டார். உடனே பா.ஜ.க என்ற பூதமும் சசி தரூரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளம்பிவிட்டது.
0 கருத்துகள்: on "சசி தரூரின் பேட்டியும் பல்டியும்"
கருத்துரையிடுக