சுயமாக நிற்கவே முடியாத நோயாளியிடம் உயரம் தாண்டும் போட்டியில் கலந்துக்கொள்ளச் சொல்வது எவ்வளவு முட்டாள்தனமோ அதைப்போன்றது தான் ஆப்கானில் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட இதர வேலைகளில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினருக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாயிடம் வேண்டுகோள் விடுத்தது.
ஏனெனில் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தின் கடும் காவலில்தான் ஹமீத் கர்ஸாயி தூங்குவதும், தூக்கத்திலிர்ந்து விழித்தெழுவதும். நிலைமை இவ்வாறிருக்கு கர்ஸாயி விரும்பினால் கூட இந்தியர்களை எவ்வாறு பாதுகாக்க இயலும்? ஆப்கானிஸ்தானில் இந்தியர்களின் உயிர்களை பாதுகாக்க உலகத்தில் ஒருவரால் மட்டுமே இயலும். அவர் நமது பிரதமர் மன்மோகன் சிங்குதான்.

ஆப்கானில் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு படையினர் முற்றிலும் வெளியேறி சமூகமான சூழல் நிலவி அங்கு ஜனநாயகம் முழுமையான ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு அந்நாட்டு மக்கள் யாரை விரும்புகின்றார்களோ அவர்கள் ஆட்சிக்கு வரும்வரை இந்தியர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பாமல் இருப்பதுதான் சிறந்தது. இதுதான் அவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கான ஒரே வழி.
ஒரு அந்நிய தேசத்தில் அத்துமீறி உள்ளே புகுந்து அப்பாவிகளை கொன்றொழித்துவிட்டு தனது அக்கிரம செயல்களுக்கு நியாயம் கற்பிக்கும் அமெரிக்கா மும்பை தாஜ் ஹோட்டலுக்கு நேராக தாக்குதல் நடத்தி இருநூறுபேரை கொன்றொழிக்க காரணமாகயிருந்ததாக கூறப்படும் அமெரிக்க உளவு நிறுவனங்களின் கைக்கூலியாக செயல்பட்ட டேவிட் ஹெட்லியை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரியும் ஏன் இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை. இந்தியாவில் நடைபெற்ற பல குண்டு வெடிப்புகளிலும் தொடர்புடையவராக கருதப்படும் ஹெட்லியை தங்களிடம் ஒப்படைக்குமாறு உறுதியுடன் கூறி அமெரிக்காவை நிர்பந்திக்க துரதிர்ஷ்டவசமாக டெல்லியில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு முதுகெலும்பு இல்லாமல் போய்விட்டது.
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவுடன் எந்த பிரச்சனையுமில்லை. பிரச்சனையெல்லாம் ஆப்கான் என்ற சுதந்திர நாட்டின் இறையாண்மை விழுங்கி அதனை ஜீரணிக்கமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா என்ற குருதியில் புரண்ட தேசத்திற்கு மறைமுகமாக இந்தியா ஆதரவளித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான். இது ஆப்கான் மக்களின் கோபத்திற்கு காரணமாவது இயல்பு.
ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் அந்நிய ஆக்கிரமிப்பு ராணுவ நடவடிக்கைக்கையில் கலந்துக்கொள்ள இந்தியாவை அமெரிக்கா வற்புறுத்திக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா தான் பங்கேற்றால் அது இந்திய மக்களின் கொந்தளிப்பிற்கு ஆளாக நேரிடும் எனக்கருதி தற்காலம் ஒதுக்கி நின்றாலும், கட்டுமானப் பணியின் போர்வையில் மிருகத்தனமான மனிதநேயமற்ற அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு துணை போனதால்தான் 10 இந்தியர்களின் விலைமதிக்க முடியாத உயிர்களை இழக்க நேர்ந்தது.
அமெரிக்காவின் தொங்கிக் கொண்டிருக்கும் இந்திய வெளிநாட்டுக் கொள்கையை அகற்றாவிட்டால் பதிலடிகளை இனிமேலும் சந்திக்கவேண்டிய சூழல்கள் உருவாகும்.
நன்றி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஆப்கானில் இந்தியா குண்டடிகளை ஏற்று வாங்குகிறது?"
கருத்துரையிடுக