
இந்த ஐந்து ஒப்பந்தங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுவது குற்றவாளிகளை ஒப்படைப்பதாகும். சவூதி அரேபியாவிற்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இரண்டாவது நாளான நேற்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைப்பது என்பது இரண்டாவது ஒப்பந்தமாகும். மூன்றாவது கலாச்சார பரிமாற்றமும், நான்காவது விஞ்ஞான தொழில்நுட்ப துறையில் உதவியுமாகும். அதுமட்டுமல்லாமல் டாட்டா மோட்டார்ஸுக்கு சவூதியில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்கான 80 மில்லியன் டாலர் மதிப்பிலான வாகனங்களை வழங்கிடும் ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும்- சவூதி அரேபியாவும் கையொப்பமிட்டன"
கருத்துரையிடுக