1 மார்., 2010

மஸ்ஜிதுல் அக்ஸாவில் இஸ்ரேலிய ராணுவத்தின் வெறியாட்டம்


ஜெருசலம்:மஸ்ஜிதுல் அக்ஸாவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இஸ்ரேலிய ராணுவமும், ஃபலஸ்தீன் முஸ்லிம்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் மஸ்ஜிதில் ஒழிந்திருக்கின்றார்கள் என்றுக்கூறி நேற்று மஸ்ஜிதின் வளாகத்திற்குள் இஸ்ரேலிய ராணுவம் அத்துமீறி நுழைந்தது. கண்ணில் கண்டவர்களையெல்லாம் விரட்டியடித்த ராணுவம் அத்துமீறலுக்கு துணிந்தது. இவர்களை தடுக்க ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் கல் எறிந்ததைத்தொடர்ந்து லாத்திசார்ஜும், ரப்பர் குண்டுவீச்சும் இஸ்ரேலிய ராணுவம் பயன்படுத்தியது.இதில் ஆறு ஃபலஸ்தீன முஸ்லிம்களுக்கு காயம் ஏற்பட்டது. ஏராளமான பேரை இஸ்ரேலிய ராணுவம் பிடித்துச்சென்றது.

யூதர்களின் கொண்டாட்டங்களுக்காக மஸ்ஜிதை கைப்பற்ற நினைத்ததுதான் பிரச்சனைக்கு காரணம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய ராணுவத்தின் திட்டத்தை அறிந்த ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை முதல் மஸ்ஜிதுல் தங்கியிருந்தனர். இவர்களை துரத்துவதற்குதான் இஸ்ரேலிய ராணுவம் கண்ணீர் குண்டுகளையும், லாத்திசார்ஜையும் பயன்படுத்தியது. இப்பிரதேசத்தின் கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டுவந்த இஸ்ரேலிய ராணுவம் அல் அக்ஸா மஸ்ஜிதிற்கு செல்லும் சாலைகளை மூடியுள்ளது. 50 வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு மஸ்ஜிதில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் கலவர சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கிழக்கு ஜெருசலத்தில் புதிதாக 600 குடியேற்ற வீடுகள் கட்டுவதற்கு இஸ்ரேலிய அரசு அனுமதியளித்துள்ளது. இதனை ஹாரட்ஸ் இஸ்ரேலிய பத்திரிகை கூறுகிறது. கட்டுமானப் பணிகள் துவங்கினால் 1,100 வீடுகள் வரை கட்டுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் அதற்கு உகந்த அனுமதியைத்தான் இஸ்ரேலிய அரசு வழங்கியுள்ளதாகவும் அப்பத்திரிகை கூறுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மஸ்ஜிதுல் அக்ஸாவில் இஸ்ரேலிய ராணுவத்தின் வெறியாட்டம்"

கருத்துரையிடுக