ஜித்தா:சவூதி அரேபியாவின் பல்வேறு சிறைகளில் வருடக்கணக்கில் வாடிவரும் நூற்றுக்கணக்கான இந்தியர்களின் விடுதலைக்காக தலையிட சவூதி அரேபியாவில் செயல்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான சமூக நல அமைப்பான இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சவூதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது.
கல்வியறிவில்லாத அப்பாவி இந்தியர்களை தொழில் விசாவில் கத்தாருக்கு கொண்டு சென்று பின்னர் விசிட்டிங் விசாவில் சவூதி அரேபியாவிற்கு கொண்டு வந்து பாலைவனத்தில் ஆடுகளை மேய்ப்பவர்களாக்கி வருடக்கணக்கில் கசக்கி பிழியும் நிலைமையை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்றும் ஃபெடர்னிடி ஃபாரம் பிரதமரிடம் கோரியுள்ளது.
புதிய விசாவில் ஹவுஸ் டிரைவர்களாக வருபவர்கள் ஸ்பான்சர்களின் நிர்பந்தத்தினால் லைசன்ஸ் எடுக்காமல் வாகனங்களை ஓட்டி போலீசில் சிக்கி வருடக்கணக்கில் சிறையில் வாடுகிறார்கள். இவர்களுடைய விடுதலைக்கு முயல வேண்டுமென்றும், இத்தகைய நஷ்டங்களை ஸ்பான்சர்களை பொறுப்பேற்க வைக்க வேண்டுமென்றும் பிரதமருக்கு அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஸ்பான்சர்சிப்பை முடக்குவது ஒரு பரவலான வியாபார தந்திரமாக மாறிவிட்டதால் அதனை முடக்குவதற்கு முன்பு இந்தியன் எம்பஸியிலோ அல்லது கன்சுலேட்டிலோ அனுமதி வாங்குவது சட்டமாக்க வேண்டும். விபத்துகளில் நஷ்ட ஈடு வழங்க இயலாமல் சிறையிலடைக்கப்படும் டிரைவர்களை விடுதலைச் செய்வதற்கான நடவடிக்கைகளை துவங்க வேண்டும்.
ஐந்து லட்சம் இந்தியர்கள் வசிக்கும் தம்மாமில் ஒரு கன்சுலேட் நிறுவவேண்டும் என்பவை ஃபெடர்னிடி ஃபாரம் பிரதமருக்கு அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சவூதி அரேபியா சிறைகளில் வாடும் இந்தியர்களை விடுவிக்க பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் கோரிக்கை"
கருத்துரையிடுக