
மருத்துவர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க சந்தைகளிலிருந்து வாபஸ் பெறப்பட்ட அவந்தியா (ரோஸிக்ளிட்டாசோன்) என்ற சர்க்கரை வியாதிக்கான மருந்துதான் விண்டியா, ரெஸர்ட், என்ஸெலின் என்ற பெயர்களில் இந்திய சந்தைகளில் பரவலாக விற்று வருகிறது.
க்ளாக்ஸோ ஸ்மித் க்ளைன் பீச்சம் என்ற அமெரிக்க நிறுவனம் தான் இம்மருந்தின் தயாரிப்பாளர்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்க செனட் ஃபினான்ஸ் கமிட்டியின் அறிக்கையில் தான் இதய அதிர்ச்சியை ஏற்படுத்தும் இம்மருந்தை அமெரிக்க சந்தைகளிலிருந்து வாபஸ் பெற்றதை வெளியிட்டிருந்தது.
தங்களுடைய வாழ்வையும், ஆரோக்கியத்தையும் அடகு வைத்து மருந்துக் கம்பெனிகளை மக்கள் நம்புகின்றனர் ஆனால் க்ளாக்ஸோ ஸ்மித் க்ளைன் பீச்சம் கம்பெனி இந்த நம்பிக்கையை அவமானப்படுத்திவிட்டது என அமெரிக்க ஃபினான்ஸ் கமிட்டி குற்றஞ் சுமத்துகிறது.
அமெரிக்காவில் வாபஸ் பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மருந்துகள் இந்தியாவில் புதிய பெயரில் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சர்க்கரை வியாதி மருந்துகளின் மிகவும் பெரிய சந்தை இந்தியாவாகும். 5 கோடியே 8 லட்சம் சர்க்கரை வியாதி நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2010 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சர்க்கரை வியாதி நோயாளிகளின் எண்ணிக்கை 7 சதவீதமாகும் என்று 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டயபெட்ஸ் காங்கிரஸ் கூறியிருந்தது.
ரோஸிக்ளிட்டாசோன் என்ற மருந்து இந்தியாவில் சர்க்கரை வியாதிக்கு அதிகமாக விற்கப்படும் மருந்தாகும். ரோஸிக்ளிட்டாசோனினுடைய இதர 30 மருந்துகளும் இந்திய சந்தையில் உள்ளது.
1 கருத்துகள்: on "அமெரிக்காவில் தடைச் செய்யப்பட்ட சர்க்கரை வியாதிக்கான மருந்து இந்திய சந்தைகளில் வேறு பெயரில் விற்பனை"
another name of americans company is fraud
கருத்துரையிடுக