ஷிமோகா:கர்நாடகா மாநிலம் ஹாஸன் மாவட்டத்திலிலுள்ள ஷிமோகாவில் நேற்று நடைபெற்ற இரு பிரிவனருக்கிடையிலான கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். இன்னொருவர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தார்.
கர்நாடகா மாநில மொழியில் வெளியாகும் நாளிதழ் ஒன்று சர்ச்சைக்குரிய எழுத்தாளர் பங்களாதேஷைச் சார்ந்த தஸ்லிமா நஸ்ரினின் கட்டுரை ஒன்றை மொழிப் பெயர்த்து வெளியிட்டிருந்தது. இக்கட்டுரைத் தொடர்பான வாக்குவாதங்கள் கலவரம் ஏற்பட காரணமாக அமைந்தது.
இரு தரப்பினர் இடையிலான மோதலில் ஒருவர் மரணமடைந்தார். இதனால் கோபமுற்ற ஒரு பிரிவினர் வாகனங்கள் மற்றும் கடைகள் மீது தாக்குதல் நடத்தியபொழுது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். 200 கி.மீ சுற்றளவிற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கர்நாடகா: ஷிமோகா கலவரத்தில் இரண்டு பேர் மரணம்"
கருத்துரையிடுக